- Home
- Gallery
- மஞ்சும்மல் பாய்ஸ் நடிகரின் முரட்டு புரபோசல்... ஒரே நாளில் ஓகே சொன்ன அபர்ணா தாஸ் - க்யூட் லவ் ஸ்டோரி இதோ
மஞ்சும்மல் பாய்ஸ் நடிகரின் முரட்டு புரபோசல்... ஒரே நாளில் ஓகே சொன்ன அபர்ணா தாஸ் - க்யூட் லவ் ஸ்டோரி இதோ
புதிதாக திருமணம் ஆன டாடா பட நடிகை அபர்ணா தாஸ் - மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் தீபக் பரம்போல் ஜோடியின் காதல் கதையை பற்றி பார்க்கலாம்.

aparna das, Deepak Parambol
டாடா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் அபர்ணா தாஸ். அப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்திருந்த அபர்ணா, அப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென திருமணம் செய்துகொண்டார் அபர்ணா. அவருக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் நடித்த நடிகர் தீபக் பரம்போலுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது.
aparna das wedding
காதல் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி, தங்களுடைய காதல் கதையை பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறது. அதன்படி இருவரும் முதன்முதலில் வடக்கஞ்சேரியில் உள்ள ஒரு ஓட்டலில் தான் சந்தித்துள்ளனர். அப்போது சாப்பிட்டுவிட்டு கைகழுவ சென்ற நடிகை அபர்ணாவை பார்த்ததும் தீபக் வணக்கம் சொன்னாராம். அவரின் அந்த குணம் அபர்ணாவை இம்பிரஸ் செய்திருக்கிறது. அதன்பின்னர் மனோகரம் பட ஷூட்டிங் தொடங்கும் முன்னர் இருவரும் சந்தித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... Ramya Krishnan : நடிகை ரம்யா கிருஷ்ணனின் திருமண போட்டோவை பார்த்திருக்கீங்களா? அன்சீன் போட்டோ வைரல்..
Aparna Das Love Marriage
அப்போது தன்னை யார் என்று தெரிகிறதா என்று அபர்ணா கேட்க, தீபக் நினைவில் இல்லை என சொல்லிவிட்டாராம். பின்னர் அப்படத்தில் இருவரும் இணைந்து நடித்தபோது இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்து நாளடைவில் அது காதலாக மாறி இருக்கிறது. முதலில் தீபக் தான் அபர்ணாவிடம் காதலை சொல்லி இருக்கிறார். அதுவும் சாதரணமாக இல்லை. ‘என்னோட வங்கி கணக்கில் இவ்வளவு தான் இருக்கிறது. நான் அடிக்கடி கோபப்படுவேன். பட வாய்ப்பு இல்லேனா கஷ்டப்பட்டு தான் ஆகனும். ஆனால் இருக்கும் வரை உன்னை நன்றாக பார்த்துக் கொள்வேன். உன்னை கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன்’ என சொல்லி புரபோஸ் செய்தாராம்.
Aparna Das Love Story
அவர் புரபோஸ் செய்த விதம் அபர்ணாவுக்கு மிகவும் பிடித்துப் போக அன்றைய தினமே ஓகே சொல்லிவிட்டாராம். குடும்பத்தினரிடமும் பேசி சம்மதம் வாங்கிய பின்னர் இருவரும் அடிக்கடி வெளிநாட்டிற்கு அவுட்டிங் செல்வார்களாம். தாங்கள் காதலிக்கும் விஷயம் வெளியில் தெரியாமல் பார்த்துக்கொண்டு வந்த இவர்கள் ஜோடியாக இருக்கும்போது எடுத்த புகைப்படம் ஒன்றை யூடியூப்பர் ஒருவர் வெளியிட்டு விட்டாராம். ஆனால் அதை யாரும் பெரிதாக கவனிக்காததால் தங்கள் காதல் விவகாரம் கடைசி வரை ரகசியமாகவே இருந்ததாக அபர்ணா தாஸ் கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... Thalapathy 69 : ‘தளபதி 69’ படம் டிராப்! கமலை போல் விஜய்யும் ஹெச்.வினோத்தை கழட்டிவிட்டாரா? தீயாய் பரவும் தகவல்