காத்துவாங்கும் லியோ.. களமிறங்கும் புதுப்படங்கள் - இந்த வார தியேட்டர் மற்றும் ஓடிடி ரிலீஸ் படங்களின் லிஸ்ட் இதோ
லியோ படத்தின் வேகம் குறைந்துள்ளதால், தமிழில் இந்த வாரம் நிறைய சிறு பட்ஜெட் படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளன.
Leo vijay
நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி திரைக்கு வந்தது. கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் ரிலீஸான இப்படம் இரண்டாவது வாரமும் சக்கைப்போடு போட்டதால் கடந்த வாரம் புதுப்படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை. இந்த நிலையில், தீபாவளி வரை இதே நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது நவம்பர் 3-ந் தேதி சிறு பட்ஜெட் படங்கள் வரிசையாக ரிலீசாக உள்ளன.
Leo
கூட்டமில்லாததால் லியோ படத்திற்கு ஒதுக்கப்பட்ட திரையரங்குகளில் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி இந்த வாரம் மட்டும் அரை டஜன் புதுப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. இவை அனைத்துமே சிறு பட்ஜெட்டில் உருவான படங்களாகும். அதேபோல் ஓடிடியிலும் சில படங்கள் வெளியாக இருக்கின்றன. அதன் விவரத்தை தற்போது பார்க்கலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தியேட்டரில் ரிலீசாகும் படங்கள்
சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி ஹீரோயினாக அறிமுகமாகும் லைசன்ஸ் திரைப்படம் நவம்பர் 3-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை கணபதி பாலமுருகன் என்பவர் இயக்கி உள்ளார். இதனுடன் கலக்கப்போவது யாரு பாலா நடித்த ரா ரா சரசுக்கு ரா ரா, வையாபுரி மற்றும் ரியாஸ் கான் நடித்த கபில் ரிட்டர்ன்ஸ், பாஸர் இயக்கிய ரூல் நம்பர் 4, சுரேஷ் கோபி மற்றும் பிஜு மேனன் நடித்த கருடன் மற்றும் பானு பவதாரா இயக்கிய பிளாட் ஆகிய படங்கள் திரைக்கு வர உள்ளன.
ஓடிடியில் ரிலீசாகும் படங்கள்
இந்த வாரம் ஓடிடியில் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படம் அன்கட் வெர்ஷனாக இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகி உள்ளது. இதுதவிர பி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த ரத்தம் திரைப்படம் அமேசான் பிரைமில் நவம்பர் 3-ந் தேதியும், சேரனின் தமிழ்க்குடிமகன் படம் ஆஹா ஓடிடியில் நவம்பர் 3-ந் தேதியும், ஆர் யூ ஓகே பேபி ஆஹா ஓடிடி தளத்தில் அக்டோபர் 31-ந் தேதியும் ரிலீஸ் ஆகி உள்ளது. அதேபோல் சமீபத்திய ஹிட் படமான இறுகப்பற்று வருகிற நவம்பர் 6-ந் தேதி முதல் நெட்பிளிக்ஸில் ரிலீஸாக உள்ளது.
இதையும் படியுங்கள்... இதல்லவா நட்பு... கமலின் ‘இந்தியன் 2’ படத்துக்கு உதவ முன்வந்த ரஜினிகாந்த்