- Home
- Gallery
- இர்பானுக்கு ஒரு நியாயம்; பிரியாணி மேனுக்கு ஒரு நியாயமா? DMKவை விமர்சித்ததால் கைதா? டிரெண்டாக்கும் நெட்டிசன்ஸ்
இர்பானுக்கு ஒரு நியாயம்; பிரியாணி மேனுக்கு ஒரு நியாயமா? DMKவை விமர்சித்ததால் கைதா? டிரெண்டாக்கும் நெட்டிசன்ஸ்
பிரியாணி மேன் அபிஷேக் கைது செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

biriyani man
யூடியூப் பிரபலங்கள் கைது செய்யப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது. பப்ஜி மதன், டிடிஎப் வாசன் வரிசையில் தற்போது லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் பிரியாணி மேன் அபிஷேக். இவர் பிரியாணி மேன் என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவர் கடந்த மாதம் யூடியூபர் இர்பானை விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கார் மோதி மூதாட்டி பலியான வழக்கு குறித்தும், அவர் தனக்கு பிறக்க உள்ள குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே அறிவித்தது பற்றியும் சரமாரியாக விமர்சித்து இருந்தார்.
Youtuber biriyani man
அதுமட்டுமின்றி டெயிலர் அக்கா குறித்து அவதூறாக பேசி இருந்தார். இந்த நிலையில், இன்று காலை வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரியாணி மேன் அபிஷேக்கை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பின் பிரியாணி மேனுக்கு ஆதரவாக எக்ஸ் தளத்தில் பல்வேறு பதிவுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதில் சிலவற்றை பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... Biriyani Man : வசமாக சிக்கிய யூடியூபர் பிரியாணி மேன்... வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்த போலீஸ்
Netizens X post
யூடியூபர் இர்பான் கார் விபத்தில் மூதாட்டி பலியானபோது அந்த ஏரியாவில் இருந்த சிசிடிவி பூட்டேஜை காணவில்லை என கூறி பத்திரிகையாளர் பாண்டியன் யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய வீடியோவை பதிவிட்டு அதில் அவர் கூறிய அந்த தமிழ்நாட்டு அக்கா யார்? விபத்தின் போது இருந்த சிசிடிவி பூட்டேஜ் எங்கே? என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
Netizens X post
மற்றொரு பதிவில் பிரியாணி மேன், டிடிஎப் வாசன் ஆகியோரை கைது பண்ணிட்டு ஏன் இர்பான், பிலிபிலிப் ஆகியோரை கைது பண்ணல இது தான் ஜனநாயகமா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
Netizens X post
மற்றொரு வீடியோவில் கருணாநிதி பூங்கா முதல் ஜி ஸ்கொயர் வரை திமுகவை விமர்சித்து வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார் பிரியாணி மேன், அதை பதிவிட்டு இதுதான் கைது நடவடிக்கைக்கு காரணமா என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
Netizens X post
ஒருவன் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக கூறியதால் இன்று சிறையில் இருக்கிறான். மறுபுறம் இர்பான் ஈஸியாக கார் விபத்து, குழந்தையின் பாலினத்தை முன்கூட்டிய வெளியிட்டது போன்றவற்றில் இருந்து ஈஸியாக எஸ்கேப் ஆகி இருக்கிறார். இப்படி தான் திமுக அரசு நடக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... யூடியூபர் இர்பான் முதல் டெயிலர் அக்கா வரை ஒரு ஆள் விடாம வம்பிழுத்தவர்; யார் இந்த பிரியாணி மேன்? என்ன பிரச்சனை?