- Home
- Gallery
- அனன்யா போட்டிருந்த அதே டிரஸ்.. அட்லீ சார் இதகூடவா காபி அடிப்பீங்க? கலாய்க்கும் நெட்டிசன்ஸ் - உண்மை என்ன?
அனன்யா போட்டிருந்த அதே டிரஸ்.. அட்லீ சார் இதகூடவா காபி அடிப்பீங்க? கலாய்க்கும் நெட்டிசன்ஸ் - உண்மை என்ன?
Priya Atlee : ஆனந்த் அம்பானி திருமண நிகழ்வில், பிரபல இயக்குனர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.

mukesh ambani
பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த அம்பானியின் திருமணம், வெகு ஜோராக மும்பை மாநகரில் நடந்து முடிந்துள்ளது. ஏற்கனவே பல நாட்கள் நடந்த பல்வேறு கொண்டாட்டங்களை தொடர்ந்து, கடந்த மூன்று நாட்களாக வெகு சிறப்பாக அவருடைய திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
priya
இந்நிலையில் இந்த திருமணத்தில் அமிதாப்பச்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி ஷாருக்கான், சல்மான் கான் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி சென்றனர். அதேபோல தென்னிந்தியாவை சேர்ந்த பல நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்களும் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.
Atlee
அந்த வகையில் அண்மையில் பாலிவுட் உலகில் பிரபல இயக்குனராக மாறியிருக்கும் அட்லீயும், அவரது மனைவி பிரியாவும், அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்றனர். அப்பொழுது "Anant's Brigade" இன்ற வாசகம் பொருந்திய உடையை சில நடிகைகள் அணிந்து வந்தனர். மேலும் அட்லீயின் மனைவி ப்ரியாவும் அதே வாசகம் பொருந்திய ஆடை அணிந்து வந்தார். உடனே, அட்லீ அதை காப்பியடித்து தான், தனது மனைவிக்கு அதே வசனம் பொருந்திய ஆடையை வாங்கி கொடுத்துள்ளார் என்று நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.
Actress in Anants Brigade
உண்மையில் அன்று பிரியா அட்லீயையும் சேர்த்து, அனன்யா மற்றும் பாலிவுட் நடிகைகள் சிலரும் அந்த வார்த்தையை பொறித்த ஆடைகளை அணிந்திருந்தனர். "Anants Brigade", அதாவது மணமகன் ஆனந்தின் படையில் இருப்பவர்கள் நாங்கள் என்பதை தெரிவிக்கும் வசனங்கள் தான் அது. அதேபோல சில பாலிவுட் ஹீரோக்கள், மணப்பெண் ராதிகா சார்பாக உடைய அணிந்து வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.