- Home
- Gallery
- VDK மாதிரி ஆகலாம்னா.. உங்கள மாதிரி ஆகிவிட்டான்.. கலாய்த்த நெட்டிசன் - கியூட் ரிப்ளை கொடுத்த தமன்னா!
VDK மாதிரி ஆகலாம்னா.. உங்கள மாதிரி ஆகிவிட்டான்.. கலாய்த்த நெட்டிசன் - கியூட் ரிப்ளை கொடுத்த தமன்னா!
Tamannah Bhatia : ட்விட்டர் தலத்தில் ரசிகர் ஒரு, தன்னைப்பற்றி விளையாட்டாக போட்ட பதிவிற்கு, கூலாக ரிப்ளை கொடுத்துள்ளார் தமன்னா.

Tamannaah Bhatia
மும்பை மாநகரில் பிறந்து வளர்ந்த பிரபல நடிகை தமன்னா, ஹிந்தி திரை உலகத்தின் மூலம் தான் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். கடந்த 2005ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 19 ஆண்டுகளாக அவர் திரைத்துறையில் பயணித்து வருகின்றார்.
சுதந்திரத்துக்கு முந்தைய கதை.. யோகி பாபு படகோட்டியாக அசத்தும் "Boat" - ட்ரைலர்!
Tamannaah
தமிழில் "கேடி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, தளபதி விஜய், தல அஜித், தனுஷ் மற்றும் விஜய்சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்களோடு ஜோடியாக இணைந்து நடித்து வருகிறார். இப்பொழுது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பெரிய அளவில் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ஹிந்தி திரைஉலகில் அவர் அதிக அளவில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
Actress Tamannaah
இந்நிலையில் இணையவாசி ஒருவர், ரசிகர்கள் அனைவரும் VDK என்று அன்போடு அழைக்கும் விஜய் தேவரகொண்டா மற்றும் தமன்னாவை இணைத்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதாவது VDK போல ஸ்டைலாக மாறலாம் என்று நினைந்து என்னை அழகுபடுத்திக்கொண்டேன். ஆனால் இப்பொது நான் Oosaravelli படத்தில் வரும் தமன்னா மாதிரி ஆகிவிட்டேன் என்று கூறியுள்ளார்.
Tamannah reply
இந்நிலையில் அவருடைய பதிவிற்கு ரியாக்ட் செய்துள்ள நடிகை தமன்னா, நீங்களும் பார்ப்பதற்கு கொஞ்சம் என்னைபோலத்தான் உள்ளீர்கள் என்று பதில் அளித்துள்ளார். அவருடைய பதிவு இப்பொது வைரலாகி வருகின்றது.