MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கோடிகளில் புரளும் தளபதியின் ‘தம்பி’கள்... அட்லீ, நெல்சன், லோகேஷுக்கு இத்தனை கோடி சம்பளமா?

கோடிகளில் புரளும் தளபதியின் ‘தம்பி’கள்... அட்லீ, நெல்சன், லோகேஷுக்கு இத்தனை கோடி சம்பளமா?

கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வரும் இயக்குனர்கள் அட்லீ, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் ஆகியோரின் சம்பள விவரம் பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 12 2024, 08:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Atlee, nelson, Lokesh

Atlee, nelson, Lokesh

கோலிவுட்டின் நட்சத்திர இயக்குனர்களாக வலம் வருபவர்கள் தான் லோகேஷ் கனகராஜ், அட்லீ மற்றும் நெல்சன் திலீப்குமார். இவர்கள் மூவருக்குமே ஒரு ஒற்றுமை உண்டு. இவர்கள் மூவருமே நடிகர் விஜய்யின் படத்தை இயக்கியதன் மூலம் தான் பேமஸ் ஆனார். அதுமட்டுமின்றி நடிகர் விஜய் இவர்களை தனது தம்பிகள் என்று வெளிப்படையாகவே கூறி இருக்கிறார். விஜய் படத்தை இயக்கி பேமஸ் ஆன இவர்கள் மூவரும் தற்போது அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்கள் லிஸ்ட்டில் லீடிங்கில் இருக்கிறார்கள். அவர்களின் சம்பள விவரம் பற்றி பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Vijay, Atlee

Vijay, Atlee

அட்லீ

நடிகர் விஜய் நடித்த தெறி படத்தை இயக்கியதன் மூலம் பேமஸ் ஆனவர் அட்லீ. இப்படத்தின் அதிரி புதிரியான வெற்றியை தொடர்ந்து அட்லீ மீது அதீத நம்பிக்கை வைத்த விஜய், தனது மெர்சல், பிகில் என இரண்டு பட வாய்ப்புகளை கொடுத்தார். எங்க அண்ணனுக்கு நான் தான் டா பண்ணுவேன்னு கெத்தாக சொன்ன அட்லீ, அதில் வெற்றியும் கண்டார். விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்ததால் தான் அட்லீக்கு ஜவான் பட வாய்ப்பு கிடைத்தது. ஜவான் பட வெற்றிக்கு பின் தன் சம்பளத்தை உயர்த்திய அட்லீ, அடுத்ததாக அல்லு அர்ஜுன் உடன் இணையும் படத்துக்காக ரூ.60 கோடி சம்பளமாக வாங்க உள்ளார்.

இதையும் படியுங்கள்... Vijay : விறுவிறுப்பான படப்பிடிப்பில் தளபதி 68.. கேமியோவில் அசத்த வரும் 4 Celebrities - வெளியான தகவல் உண்மையா?

34
Vijay, Lokesh Kanagaraj

Vijay, Lokesh Kanagaraj

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜின் முதல் படமான மாநகரம் பார்த்ததும் இம்பிரஸ் ஆன விஜய், அவரின் அடுத்த பிளாக்பஸ்டர் ஹிட் படமான கைதி ரிலீஸ் ஆகும் முன்னரே அவருக்கு தன்னுடைய மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார். மாஸ்டர் படத்தை மாஸாக இயக்கி வெற்றிகண்ட லோகேஷ் கனகராஜுக்கு மீண்டும் லியோ பட வாய்ப்பை வழங்கினார் விஜய். இப்படம் தான் நடிகர் விஜய்யின் கெரியரில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது. லியோ படத்தின் வெற்றிக்கு பின்னர் ரஜினியின் கூலி படத்தை இயக்க கமிட் ஆகி உள்ளார் லோகேஷ். இப்படத்திற்காக அவருக்கு ரூ.60 கோடி சம்பளமாக வழங்கப்பட உள்ளதாம்.

44
Vijay, Nelson Dilipkumar

Vijay, Nelson Dilipkumar

நெல்சன்

கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த நெல்சன் விஜய்யை வைத்து பீஸ்ட் என்கிற தோல்வி படத்தை கொடுத்தாலும், அப்படத்தின் நாயகன் விஜய்யின் மூலம் தான் அவருக்கு ரஜினியின் ஜெயிலர் பட வாய்ப்பு கிடைத்தது. இதை நெல்சனே பல பேட்டிகளில் கூறி இருக்கிறார். ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கான வேலைகளில் இறங்கி இருக்கும் நெல்சன், அப்படத்திற்காக ரூ.50 கோடி சம்பளம் வாங்க இருக்கிறாராம்.

இதையும் படியுங்கள்... Losliya : மாடர்ன் உடைக்கு கொஞ்சம் ரெஸ்ட்.. சேலையில் கவர்ச்சி அலை வீசும் லாஸ்லியா மரியநேசன் - Hot Pics!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அட்லீ
கூலி (ரஜினிகாந்த் திரைப்படம்)
ஜெயிலர் 2
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved