சீரியலில் படக்கென்று என்ட்ரி கொடுத்த கோபிநாத்.. அப்போ நீயா நானாவுக்கு குட் பை தானா? என்ன நடக்கபோகுது?
தமிழில் உள்ள பல ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் நீயா நானா, இந்த நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற ஒருவர் தான் நீயா நானா கோபிநாத். உண்மையில் பெரிய அளவிலான பொறுமையோடு அந்த நிகழ்ச்சியை அவர் கையாளும் விதமும், தமிழ் மொழியின் மீதான இவருடைய ஆளுமையும் பலர் இவரை ரசிக்க ஒரு காரணம்.
Neeya Naana Reality Show
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மக்கள் யார் பக்கம் என்ற நிகழ்ச்சியின் மூலன் தனது சின்னத்திரை பயணத்தை துவங்கிய கோபிநாத், பல ரியாலிட்டி ஷோக்களை தலைமையேற்று நடத்தியுள்ளார். அதில் ஒன்று தான் நீயா நானா. இதுவரை இவர் 5 வெவ்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தாலும் இவர் புகழ் பெற்றது நீயா நானா மூலம் தான்.
Gopinath with Kalaingar
வாமனன், தோனி மற்றும் திருநாள் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரானை ரோஜா சீசன் 2வில் வரும் ஒரு எபிசோடில் இவர் என்ட்ரி கொடுத்துள்ளது பலரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
Neeya Naana Gopinath in Serial
இன்று வெளியான ஈரமான ரோஜாவே தொடரின் இரண்டாம் சீசன் ப்ரோமோவில், ஒரு முதியோர் இல்லத்தில் நடக்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கோபிநாத் பங்கேற்று, கூட்டு குடும்பம் மட்டும் தனிக்குடுத்தனம் பற்றி அங்குள்ள முதியோர்களிடம் உரையாடுகிறார். ஆகவே இனி இந்த சீரியலில் அடிக்கடி இனி கோபிநாத் நடிக்க வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல இனி நீயா நானா நிகழ்ச்சியை வேறொருவர் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
ஜெயிலர் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உருவெடுத்த ரஜினிகாந்த்! இதுதான் ரகசியம்