- Home
- Gallery
- 10 வருடத்திற்கு பின் நயன்தாராவுடன் சந்திப்பு... முத்த மழை பொழிந்த நடிகை நஸ்ரியா - வைரலாகும் போட்டோஸ்
10 வருடத்திற்கு பின் நயன்தாராவுடன் சந்திப்பு... முத்த மழை பொழிந்த நடிகை நஸ்ரியா - வைரலாகும் போட்டோஸ்
நடிகை நஸ்ரியாவும், நயன்தாராவும் ராஜா ராணி படத்திற்கு பின் சுமார் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்தித்துக்கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகிறது.

nazriya meet nayanthara
அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய நேரம் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் நஸ்ரியா. அப்படத்தில் இடம்பெற்ற பிஸ்தா பாடலில் நஸ்ரியாவின் நடனத்தை ரிப்பீட் மோடில் பார்த்து ரசிகர்கள் அவரை பேமஸ் ஆக்கினர். பின்னர் அட்லீ இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ரிலீஸ் ஆன ராஜா ராணி படம் நஸ்ரியாவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நஸ்ரியா.
Nayanthara, nazriya
படத்தில் கம்மியான சீன்களில் மட்டுமே வந்தாலும் அவரது கேரக்டர் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. அந்த அளவுக்கு அப்படத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக நஸ்ரியாவின் ரோல் அமைந்திருந்தது. அதேபோல் அப்படத்தில் நடிகை நயன்தாராவும் ஆர்யாவின் மனைவியாக நடித்திருந்தார். நஸ்ரியாவுக்கும், நயன்தாராவுக்கும் அப்படத்தில் ஒரு காம்பினேஷன் சீன் கூட கிடையாது. இருந்தாலும் அப்பட ஷூட்டிங்கின் போது நட்புடன் பழகி வந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... இது.. அதுல்ல.. சிக்கிய போட்டோஸ்.. புயலை கிளப்பும் த்ரிஷா விவகாரம்.. அப்ப விஜய்யின் அரசியல் வாழ்க்கை?
nazriya friend Nayanthara
ராஜா ராணி படத்துக்கு பின்னர் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நஸ்ரியா, அடுத்த ஆண்டே நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். திருமணத்துக்கு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த நஸ்ரியா, தற்போது அவ்வப்போது ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். மறுபுறம் பகத் பாசில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து மாஸ் காட்டி வருகிறார்.
Fahadh Faasil, nazriya - vignesh shivan, Nayanthara
இந்த நிலையில், தன்னுடைய தோழியான நஸ்ரியாவை 10 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துள்ள நயன்தாரா, அப்போது அவரை கட்டியணைத்து முத்த மழை பொழிந்திருக்கிறார். அதேபோல் நஸ்ரியாவின் கணவர் பகத் பாசில், நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோரும் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தனர். இவர்கள் நால்வரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட குரூப் செல்பி புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... 250 கோடி நஷ்டம்.. பிரபல ஹீரோவின் படம் பிளாப் ஆனதால் ஆபிஸையே விற்ற தயாரிப்பாளர்- ஆனா அது விஜய், பிரபாஸ் படமில்ல