MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அந்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைத்தது தான் தவறு.. தனுஷ் பட இயக்குனர் ஓபன் டாக்...

அந்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைத்தது தான் தவறு.. தனுஷ் பட இயக்குனர் ஓபன் டாக்...

பிரபல இயக்குனர் சேகர் கம்முலா தனது அனாமிகா படம் குறித்து, நடிகை நயன்தாரா குறித்தும் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Ramya s
Published : Jul 03 2024, 08:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Anaamika movie

Anaamika movie

வித்யாபாலன் நடித்த 'கஹானி' என்ற பாலிவுட் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. வணிக ரீதியிலும் இந்த படம் வெற்றி படமாகவே அமைந்தது. இந்த படத்தின் ரீமேக்காக தமிழ் மற்றும் தெலுங்கில் இரு மொழி படமாக அனாமிகா என்ற படத்தைய் பிரபல இயக்குனர் சேகர் கம்முலா இயக்கினார். இது தான் அவர் தமிழில் இயக்கிய முதல் படமாகும். நடிகை நயன்தாரா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். எனினும் இப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Nayanthara

Nayanthara

இந்த படம் குறித்து இயக்குனர் சேகர் கம்முலா அளித்த பழைய பேட்டி ஒன்று மீண்டும் வைரலாகி வருகிறது. அதில் பேசிய அவர், அனாமிகா படத்தை இயக்க வேண்டாம் என்று முதலில் நினைத்ததாக கூறினார். ஆனால் பெண்களை மையமாக கதைக்களம் கொண்ட படத்தை இயக்க வேண்டும் என்று விரும்பியதால் இந்த படத்தை இயக்கியதாக கூறினார்.

36
Nayanthara

Nayanthara

அந்த சமயத்தில் நிர்பயா சம்பவம் முழு நாட்டையும் உலுக்கியது, அந்த நேரத்தில் தனக்கு நல்ல கதை இல்லாததால், பாலிவுட் படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்ததாகவும், அப்போது உச்சத்தில் இருந்த நயன்தாரா போன்ற நடிகை இப்படத்தில் நடித்தால் நல்ல வரவேற்பை பெறும் என நம்பியதாகவும் கூறினார்.

46
sekhar kammula about Nayanthara

sekhar kammula about Nayanthara

பின்னர் படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்ததை ஒப்புக்கொண்ட அவர், இந்த படத்தை உணர்வுப்ப்பூர்வமாக உருவாக்கியிருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் இந்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைத்தது தவறான தேர்வு என்றும் இயக்குனர் சேகர் கம்முலா தெரிவித்தார்.

 

56
Sekhar Kammula

Sekhar Kammula

தற்போது தனுஷின் 'குபேரா' படத்தை சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இந்த படத்தில், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

66
Nayanthara

Nayanthara

இதனிடையே நயன்தாராவின் 'டெஸ்ட்' மற்றும் 'மானங்கட்டி படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷுடன் இணைந்து 'டாக்ஸிக்' படத்திலும் நடித்து வருகிறார். மேலும் நயன்தாரா மலையாளத்தில் நிவின் பாலியுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கிறார்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved