கவினுடன் காத்துவாக்குல காதல் செய்யும் நயன்... இதை யாருமே எதிர்பாக்கலயே!
Nayanthara : பிரபல நடிகை நயன்தாரா, நடிகர் கவினுடன் இணைந்து நடித்து வரும் திரைப்படம் குறித்த ஒரு அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Kavin
திருச்சியில் பிறந்து சின்னத்திரை நாடகங்கள் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கி, இன்று தொடர்ச்சியாக பல கோலிவுட் திரைப்படங்களில் நடித்து, முன்னணி நாயகனாக மாறியுள்ளனர் தான் கவின் அவருக்கு வயது 34.
ஸ்ருதியிடம் கூட கமல் ரொமான்ஸ் செய்வார்.. பரபரப்பை கிளப்பிய டாப் ஹீரோ!
Kanaa Kaanum Kalangal
கடந்த 1990ம் ஆண்டு பிறந்த நடிகர் கவின், 2011ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான "கனா காணும் காலங்கள்" என்கின்ற சீரியல் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். தொடர்ச்சியாக அவர் பல நல்ல சீரியல்களில் நடித்து வந்தார்.
Star
அதன் பிறகு கடந்த 2017ம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான "நட்புன்னா என்னன்னு தெரியுமா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் கவின். தொடர்ச்சியாக "லிப்ட்", "டாடா" மற்றும் "ஸ்டார்" போன்ற வெற்றி திரைப்படங்களை கொடுத்தார். இப்பொழுது லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
nayanthara and kavin Movie
வயதில் மூத்த பெண்ணின் மீது ஏற்படும் காதல் குறித்த அந்த திரைப்படத்தை, லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விஷ்ணு என்பவர் இயக்கும் நிலையில், நயன்தாரா மற்றும் கவின் ஆகிய இருவரும் அந்த திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இப்பொது அந்த திரைப்படத்திலிருந்து ஒரு புகைப்படத்தை நயன்தாரா வெளியிட்டுள்ளார்.
DD Neelakandan: மீண்டும் மணப்பெண் கோலத்தில் டிடி; ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தொகுப்பாளினி