ரத்தமாரே... ரத்தமாரே! பொறுப்புள்ள டாடியாக... மகன்களுடன் கொஞ்சி விளையாடிய விக்கி - வைரலாகும் போட்டோஸ்
நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், தன் இரட்டை ஆண் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Nayanthara vignesh shivan family
சிம்பு நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு திரைக்கு வந்த போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடிகராக களமிறங்கிய விக்கிக்கு தனுஷ் தயாரிப்பிலேயே அடுத்த படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் நானும் ரெளடி தான். பிளாக்பஸ்டர் ஹிட் ஆன இந்த படம் தான் விக்னேஷ் சிவனின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம்.
vignesh shivan kids
நானும் ரெளடி தான் பட ஷூட்டிங்கின்போது தான் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நடிகை நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. சுமார் 7ஆண்டுகள் உருகி உருகி காதலித்த இந்த ஜோடி கடந்தாண்டு திருமணம் செய்துகொண்டது. மகாபலிபுரத்தில் கடற்கரையோரம் அமைந்துள்ள பிரம்மாண்ட நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நயன் - விக்கியின் திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
இதையும் படியுங்கள்... இந்த முறை பிக்பாஸில் 2 டைட்டில் வின்னரா? ஒரே புரோமோவில் ரசிகர்களை இப்படி கன்பியூஸ் பண்ணிட்டீங்களே தலைவரே!
vignesh shivan with his sons
திருமணத்துக்கு பின்னர் இருவருமே சினிமாவில் பிசியான நிலையில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஒரு அதிர்ச்சி பதிவை போட்டார் விக்கி. அதில் தானும் நயன்தாராவும் பெற்றோர் ஆகிவிட்டதாக குறிப்பிட்டு குழந்தைகளுடன் எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் நான்கே மாதத்தில் எப்படி என ஷாக் ஆக, பின்னர் தான் அவர்கள் இருவரும் வாடகைத்தாய் முறையில் இந்த குழந்தையை பெற்றெடுத்தது தெரியவந்தது.
uyir and ulag photos
இதையடுத்து அந்த குழந்தைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டிய நயன்தாரா சில மாதங்கள் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்தார். தற்போது நயன் - விக்கி ஜோடியின் இரட்டை குழந்தைகளான உயிர், உலகத்திற்கு ஒரு வயது ஆக உள்ள நிலையில், தன் மகன்களின் கியூட்டான புகைப்படங்கள் சிலவற்றை தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் விக்கி. இதைப்பார்த்த ரசிகர்கள் பொறுப்புள்ள அப்பாவாக விக்கி இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... நான் 1995 Batch.. 28 ஆண்டுகள் கழித்து பாடமெடுத்த ஆசிரியரை சந்தித்த சூர்யா - குஷியில் வெளியிட்ட புகைப்படங்கள்!