- Home
- Gallery
- பிசினஸில் படு பிசியாக இருக்கும் நயன்தாரா... கணவருடன் சேர்ந்து இத்தனை தொழில்கள் செய்கிறாரா? முழு லிஸ்ட் இதோ
பிசினஸில் படு பிசியாக இருக்கும் நயன்தாரா... கணவருடன் சேர்ந்து இத்தனை தொழில்கள் செய்கிறாரா? முழு லிஸ்ட் இதோ
சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக இருக்கும் நயன்தாரா தன்னுடைய கணவருடன் சேர்ந்து செய்து வரும் தொழில்கள் குறித்து பார்க்கலாம்.

Nayanthara, Vignesh Shivan
நயன்தாரா என்று சொன்னதும் அனைவருக்கும் முதலில் கூறுவது அவர் ஒரு நடிகை என்று தான், ஆனால் அவரோ தற்போது பிசினஸில் கொடிகட்டிப்பறந்து வருகிறார். நடிப்பே அவருக்கு சைடு பிசினஸாக ஆகும் அளவுக்கு செம்ம பிசியான தொழிலதிபராக வலம் வருகிறார் நயன்தாரா. அவர் தற்போது 10 நிறுவனங்களில் முதலீடு செய்து அதன் மூலம் கோடி கோடியாய் வருவாயும் ஈட்டி வருகிறார். அவர் செய்யும் பிசினஸ் பற்றி பார்க்கலாம்.
nayanthara Business
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து ரெளடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். அந்நிறுவனம் மூலம் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. மேலும் வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் என்கிற படமும் தயாரித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... சல்மானும் இல்ல.. கமலும் இல்ல - டாப் தமிழ் நடிகரை வைத்து வேற ஸ்கெட்ச் போடும் அட்லீ!
Nayanthara busy in business
அழகு சாதன பொருட்களை சொந்தமாக தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்கிற நயன்தாராவின் கனவு கடந்த ஆண்டு நனவானது. அவர் 9 ஸ்கின் என்கிற நிறுவனத்தை தொடங்கி, அதில் சருமத்திற்கு தேவையான அழகு சாதன பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இதுதவிர லிப்ஸ்டிக்கிற்கு மட்டும் தனியாக லிப் பாம் என்கிற கம்பெனியையும் நடத்தி வருகிறார் நயன்தாரா.
Lady Superstar nayanthara
மேலும் பெமி9 என்கிற நாப்கின் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் நயன்தாரா. அதன் விற்பனையும் தற்போது ஜோராக நடைபெற்று வருகிறது. இதுதவிர டிவைன் புட்ஸ் என்கிற நிறுவனத்திலும் பங்குதாரராக உள்ளார். அந்நிறுவனம் ஆரோக்கியமான உணவை மக்களுக்கு வழங்கி வருகிறது.
Nayanthara and vignesh shivan with Velumani
மேற்கண்ட நிறுவனங்களில் தவிர மேலும் சிலவற்றிலும் நயன்தாரா முதலீடு செய்திருக்கிறார். அதில் ஒன்று தான் நாகர்கோவில் ஆர்யபவன் உணவகம், இதுதவிர விக்கி பிலிக்ஸ், டார்க் டேலண்ட், கார்பன் மெட்ராஸ், கிரியேட் வெர்ஸ் போன்ற நிறுவனங்களிலும் நடிகை நயன்தாரா முதலீடு செய்து இருக்கிறாராம். அவரின் இத்தனை தொழில்களையும் தைரோகேர் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் வேலுமணி தான் நிர்வகித்து வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... 20 வருடத்திற்கு பின்னர்... கமல்ஹாசனுடன் 'தக் லைஃப்' படத்தில் இணையும் பிரபல நடிகை! எகிறும் எதிர்பார்ப்பு!