- Home
- Gallery
- இசை புயல் முதல்.. நயன்தாரா வரை.. ஆனந்த் ராதிகா திருமணத்தில் பங்கேற்ற சவுத் ஸ்டார்ஸ் - கூல் பிக்ஸ் இதோ!
இசை புயல் முதல்.. நயன்தாரா வரை.. ஆனந்த் ராதிகா திருமணத்தில் பங்கேற்ற சவுத் ஸ்டார்ஸ் - கூல் பிக்ஸ் இதோ!
South Indian Stars : மும்பையில் நடைபெறும் ஆனந்த், ராதிகா திருமணத்தில், தென்னிந்தியா சினிமா பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.

Venkatesh
மும்பையில் உள்ள ஜியோ உலக வர்த்தக மையத்தில் இப்போது ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஜோடியின் திருமணம் நடைபெற்று வருகிறது, மூன்று நாட்கள் இந்த திருமண விழா நடக்க உள்ளது.
Vignesh shivan
வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என்று பலரும் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வில் பங்கேற்று வருகின்றனர்.
Rajini in mumbai
தனது இளைய மகள் மற்றும் மனைவியோடு திருமண விழாவிற்கு சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மணமகன் ஆனந்த் அம்பானியோடு இணைந்து நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
AR Rahuman
அதேபோல பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் அவர்கள், தனது மனைவியோடு ஆனந்த், ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தில் பங்கேற்று தம்பதிகளை வாழ்த்தியுள்ளார்.
Priya Atlee
தல தோனி, நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன், இயக்குனர் அட்லி அவரது மனைவி பிரியா, பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் வெங்கடேஷ், தெலுங்கு திரை உலக சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
Ram Charan
பாலிவுட் உலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார், WWE மல்யுத்த வீரரான ஜான் சீனா அவர்களும் இந்த திருமண வைபோகத்தில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Dhoni
நாளை ஜூலை 13ஆம் தேதி "ஆசீர்வாத்" நிகழ்ச்சி நடைபெறும் நிலையில், ஜூலை 14ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியோடு ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டங்கள் முடிவுறுகிறது.