நாட்டாமை டீச்சரை ஞாபகம் இருக்கா?... ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை ராணியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
Nattamai teacher Rani : நாட்டாமை படத்தில் டீச்சராக நடித்து பிரபலமடைந்த நடிகை ராணியின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Nattamai Teacher
தமிழ் சினிமாவின் கிளாசிக் ஹிட் படங்களுள் ஒன்று நாட்டாமை. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இப்படத்தில் சரத்குமார் ஹீரோவாக நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக குஷ்பு, மீனா ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த 1994-ம் ஆண்டு வெளிவந்த இப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. அப்படத்துக்கு இன்றளவு மவுசு குறையவில்லை. தற்போது டிவி-யில் போட்டால் கூட டிஆர்பியில் அடித்து நொறுக்குகிறது.
Actress Rani
நாட்டாமை படத்தின் வெற்றிக்கு பின் இப்படத்தின் ரீமேக் உரிமையை போட்டி போட்டு வாங்கி தெலுங்கில் பெத்தராயுடு என்கிற பெயரில் வெளியிட்டனர். அங்கும் சக்கைப்போடு போட்டது. அதேபோல் இந்தியில் அனில் கபூர் நடிப்பில் ரீமேக் செய்து வெளியிடப்பட்ட நாட்டாமை திரைப்படம் பாலிவுட்டிலும் பட்டைய கிளப்பியது.
Nattamai Actress Rani
இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆன நடிகை தான் ராணி. இவர் நாட்டாமை படத்தில் டீச்சராக நடித்திருந்தார். ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு செக்ஸியாக சேலை உடுத்தி கிளாமரான டீச்சராக படம் முழுக்க வலம் வருவார் ராணி. இந்த படத்தில் திருப்புமுனையான கதாபாத்திரமாக ராணியின் கதாபாத்திரம் அமைந்திருந்தது. அவரது கேரக்டருக்கு உயிர் கொடுத்தது அவருக்காக போடப்பட்ட பின்னணி இசை தான்.
இதையும் படியுங்கள்... நான் காப்பி அடிக்குறேன்னு... என்மேல வழக்கு போட்ட எவனும் ஜெயிக்கல - மார்தட்டிக் கொள்ளும் அட்லீ
Serial Actress Rani
இதையடுத்து ராமராஜனின் வில்லுப்பாட்டு படம் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார் ராணி. ஆனால் ஹீரோயினாக அவருக்கு பெரிய அளவில் மவுசு இல்லாததால் மீண்டும் கவர்ச்சி ரூட்டுக்கே தாவிய ராணி, ஜெமினி உள்பட ஏராளமான திரைப்படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடி அசத்தினார்.
Actress Rani photos
பின்னர் பிரசாந்த் பூரா என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டே விலகிய ராணி, பின்னர் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி, ஜீ தமிழில் சீதா ராமன் போன்ற சீரியல்களில் நடித்து வந்த ராணியின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதைப்பார்த்த ரசிகர்கள் நாட்டாமை டீச்சரா இது என ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... கொடைக்கானலில் விதிமீறி பங்களா கட்டியதோடு.. காசு கொடுக்காம ஏமாத்துகிறார் - பாபி சிம்ஹா மீது நண்பர் பகீர் புகார்