ராஷ்மிகா மந்தனாவுக்கு இவ்வளவு சின்ன வயது தங்கையா? வைரலாகும் கியூட் ஃபேமிலி கிளிக்ஸ்!
Rashmika Mandanna : இந்தியாவின் நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்படும் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது குட்டி தங்கையோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Actress Rashmika Mandanna
தனது ஆரம்ப கால திரை பயணத்தில் 25க்கும் மேற்பட்ட முறை நிராகரிப்பை மட்டுமே சந்தித்து, இன்று ஒரு திரைப்படத்திற்கு மூன்று முதல் ஐந்து கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்று இந்திய திரை உலகின் நேஷனல் கிரஷ் என்கின்ற பட்டத்தோடு வளம் வரும் சிறந்த நடிகை தான் ராஷ்மிகா மந்தனா என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை.
Actress Rashmika Mandanna
தனது இளம் வயதில் வாடகை கூட செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்த ஒரு குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்த நடிகை தான் ராஷ்மிகா மந்தனா. ஆனால் ஒரு கட்டத்தில் ராஷ்மிகாவின் தந்தை மிகப்பெரிய தேயிலை தோட்டத்திற்கே முதலாளியாக மாறியதும் குறிப்பிடத்தக்கது. பெங்களூரில் தனது பட்டப் படிப்பை முடித்த அவர் மாடலிங் துறையில் களம் இறங்கினார்.
Rashmika Sister Shima
அதன் பிறகு தொடர்ச்சியாக தனக்கு கிடைத்த பட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு பயணித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, கடந்த 2021ம் ஆண்டு தமிழில் வெளியான நடிகர் கார்த்தியின் சுல்தான் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். தொடர்ச்சியாக தமிழில் வாரிசு என்கின்ற திரைப்படத்தில் நடித்த அவர், தற்பொழுது தனுஷின் குபேரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
Rashmika Mandanna Photos
கடந்த 1996ம் ஆண்டு பிறந்த நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு வயது 28, அதேபோல அவருடைய தங்கை ஷிமாவிற்கு வயது இப்பொது ஒன்பது. ராஷ்மிகா பிறந்து சுமார் 19 ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை அவர். தனது தங்கையோடு மிக நெருக்கமான பாசத்தோடு பழகி வரும் ராஷ்மிகா, அவரோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்பொழுது இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.
தேசிய விருது கிடைத்ததும் நிறைவேறிய ஆசை.. டாப் தமிழ் நடிகரோடு இணையும் நித்யா மேனன்!