- Home
- Gallery
- அனிருத் உடன் டேட்டிங் வதந்தி.. பல சர்ச்சைகள்.. தற்போது பாலிவுட்டில் அறிமுகமாகும் தேசிய விருது பெற்ற நடிகை..
அனிருத் உடன் டேட்டிங் வதந்தி.. பல சர்ச்சைகள்.. தற்போது பாலிவுட்டில் அறிமுகமாகும் தேசிய விருது பெற்ற நடிகை..
குழந்தை நட்சத்திரமாக திரையில் அறிமுகமான நடிகை ஒருவர் பின்னர் தனது நடிப்பு திறமைக்காக தேசிய விருதை வென்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்

குழந்தை நட்சத்திரமாக திரையில் அறிமுகமான நடிகை ஒருவர் பின்னர் தனது நடிப்பு திறமைக்காக தேசிய விருதை வென்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். அது வேறு யாருமல்ல, நடிகை கீர்த்தி சுரேஷ் தான்.
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையை தொடங்கிய கீர்த்தி சுரேஷ் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறினார். மலையாளம் மட்டுமின்றி , தமிழ், தெலுங்கிலும் தனக்கென தனி ரசிக பட்டாளத்தை உருவாக்கி முன்னணி நடிகையாக மாறினார். கீர்த்தி சுரேஷின் திரை வாழ்க்கை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான சுரேஷ் குமார் மற்றும் நடிகை மேனகாவின் இளைய மகள் கீர்த்தி சுரேஷ். அவருக்கு ரேவதி சுரேஷ் என்ற மூத்த சகோதரியும் உள்ளார், இவர் பிரியதர்ஷனிடம் இணை இயக்குநராக பணிபுரிகிறார்.
மலையாளத்தில் சுரேஷ் கோபியின் பைலட்ஸ், அச்சநேயனேநிக்கிஷ்டம் மற்றும் திலீப் நடித்த குபேரன் போன்ற மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் கீர்த்தி சுரேஷ்.. இவை அனைத்தும் அவரது தந்தையால் தயாரிக்கப்பட்ட படங்கள் ஆகும். இருப்பினும், உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த உடனேயே, அவர் பேஷன் டிசைனிங் படிப்பில் இறங்கினார். 2013 இல் சினிமாவுக்குத் திரும்பினார்.
2013 ஆம் ஆண்டில், நடிகை பிரியதர்ஷன் இயக்கிய கீதாஞ்சலி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். மோகன்லால் முதன்மை வேடத்தில் நடித்த இந்த படத்தில், நடிகர்கள் நிஷான், சித்திக், மது மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கீர்த்தி சுரேஷ் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே இந்த படத்தில் நடித்தார். தொடர்ந்து ரிங் மாஸ்டர் என்ற மற்றொரு மலையாள திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். இந்த படத்தில் அவர் திலீப்பின் ஜோடியாக நடித்தார்.
மலையாள சினிமாவை தொடர்ந்து, கீர்த்தி விரைவில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார், 2015-ம் ஆண்டு இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகின் அறிமுகமானார். அதன்பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ மற்றும் ரஜினிமுருகன், தளபதி விஜய்யின் பைரவா ஆகிய படங்களில் கீர்த்தி நடித்தார்.
Keerthy
ஆனால் மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நாக் அஸ்வின் இயக்கிய மகாநதி என்ற பயோபிக் படத்தில் நடித்த பின்னர் கீர்த்தி சுரேஷின் திரை வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. இந்த படத்தில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தா கீர்த்தி சுரேன். இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் அவர் வென்றார்.
Keerthy Suresh
இதை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், சாமி 2, சண்டக்கோழி 2 மற்றும் சர்கார் போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் பல வெற்றி படங்களில் நடித்தார். இப்படி தமிழில் ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கிலும் மகேஷ் பாபு, பவன் கல்யாண் சிரஞ்சீவி போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் ஹிட் படங்களிலும் நடித்தார். தெறி படத்தின் அதிகாரப்பூர்வ ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.
இதனிடையே கீர்த்தி சுரேஷ் பிரபல இளம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருடன் டேட்டிங் செய்வதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் பல வதந்திகள் பரவின. இருப்பினும் இந்த வதந்திகளை ஆதாரமற்ற கீர்த்தி சுரேஷின் தந்தை மறுத்தார். மேலும் ப் பற்றி ஊடகங்களுக்கு இதுபோன்ற செய்திகளை பரப்புவதை நிறுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்..
keerthy suresh
அதே போல் துபாயை சேர்ந்த தொழிலதிபருடன் டேட்டிங் செய்வதாக பல வதந்திகள் பரவியது. அந்த தொழிபதிபருடன் கீர்த்தி 9 ஆண்டுகள் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும், விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது..
கீர்த்தி சுரேஷ் பல்வேறு தமிழ் திரைப்படங்களிலும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார். கடைசியாக அவர் ஜெயம் ரவியின் சைரன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இந்த படத்தில் அவர் முதல் முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்தார்.
ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி போன்ற படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும், மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான கல்கி 2898 AD படத்தில் புஜ்ஜி என்ற ரோபோவுக்கு கீர்த்தி குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.