- Home
- Gallery
- Priyamani : "வெட்கப்படும் முத்தழகு".. 40 வயசுன்னு சொன்னா யார் நம்புவா? - கூல் போஸில் கிறங்கடிக்கும் ப்ரியாமணி!
Priyamani : "வெட்கப்படும் முத்தழகு".. 40 வயசுன்னு சொன்னா யார் நம்புவா? - கூல் போஸில் கிறங்கடிக்கும் ப்ரியாமணி!
Actress Priyamani : கர்நாடகாவின் பிறந்து, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என்று இந்திய மொழிகள் பலவற்றில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் நடிகை தான் பிரியாமணி.

Priyamani
பெங்களூரில் கடந்த 1984ம் ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி பிறந்த பிரியாமணிக்கு வயது 40. கடந்த 2003ம் ஆண்டு வெளியான ஒரு தெலுங்கு திரைப்படம் மூலமாக தனது கலை உலக பயணத்தை இவர் தொடங்கினார்.
Priyamani Photo Gallery
தமிழில் கடந்த 2004ம் ஆண்டு, பிரபல இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான "கண்களால் கைது செய்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட் உலகில் அறிமுகமானார். தொடர்ச்சியாக பல நல்ல தமிழ் படங்களில் அவர் நடித்து வந்தார்.
Actress Priyamani
கடந்த 2007ம் ஆண்டு பிரபல இயக்குனர் அமீர் இயக்கத்தில், கார்த்தி நாயகனாக அறிமுகமான "பருத்திவீரன்" என்கின்ற திரைப்படத்தில் "முத்தழகு" என்கின்ற கதாபாத்திரத்தில் நடிகை பிரியாமணி வாழ்ந்தார் என்றே கூறலாம். அதற்கு சான்றாக அவருக்கு கிடைத்தது தான் தேசிய விருது.
Kollywood Actress Priyamani
கடந்த 2017ம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை பிரியாமணி, திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக தமிழில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான "கஸ்டடி" என்கின்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.