- Home
- Gallery
- சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அற்ப பதர்! ஆபாசமாக பேச துண்டுவிடும் திமுக! இறங்கி அடிக்கும் நாராயணன் திருப்பதி!
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அற்ப பதர்! ஆபாசமாக பேச துண்டுவிடும் திமுக! இறங்கி அடிக்கும் நாராயணன் திருப்பதி!
சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை பொதுக்கூட்டங்களில் ஆபாசமாக, அதாவது திராவிட மாடலாக பேசுவதற்கு திமுக தான் தூண்டி விடுகிறது என்பது உறுதியாகிறது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

Sivaji Krishnamurthy
திமுக பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். காஞ்சிபுரத்தில் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி நடைபெற்ற தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டத்தில் சரத்குமார் மற்றும் ராதிகா குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையானது. அவரது பேச்சை கடுமையாக விமர்சித்த நடிகை ராதிகா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் கிருஷ்ணமூர்த்தி மீது புகார் அளித்திருந்தார்.
இதையும் படிங்க: நாய் வாலை.. சர்ச்சையில் சிக்கிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.. சாட்டையை சுழற்றிய குஷ்பூ, ராதிகா சரத்குமார்!
Tamilisai Soundararajan
இந்நிலையில் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பொறுப்பேற்ற விழா மேடையில் தமிழிசை சவுந்தராஜனை, உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டித்து பேசுவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியானது தொடர்பாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில், தமிழிசை சௌந்தரராஜனை அருவருக்கத்தக்க வகையில் தரக்குறைவாக பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கொலை நகரமாகும் தலைநகரம்.. லிஸ்ட் போட்டு காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வரை போட்டு தாக்கும் அண்ணாமலை!
Sivaji Krishnamurthy Controversy Speech
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: மீண்டும் திமுகவை சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்கிற அற்ப பதர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை அருவருக்கத்தக்க வகையில் தரக்குறைவாக பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை ஒருமையில் பேசுவது, இந்த நபரை தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் ஆபாசமாக, அதாவது திராவிட மாடலாக பேசுவதற்கு திமுக தான் தூண்டி விடுகிறது என்பது உறுதியாகிறது.
Narayanan Thirupathy
இது போன்ற கேவலங்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும். அநாகரீக, ஆபாச, அருவருக்கத்தக்க, கேவல, கண்டிக்கத்தக்க அரசியலின் இருப்பிடம் திமுக தான் என்பதற்கு சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை விட வேறு ஆதாரம் தேவையில்லை. சிறிதளவேனும் மனசாட்சி இருந்தால், பொறுப்பு இருந்தால், கீழ்த்தரமான அரசியலை திமுக முன்னெடுப்பதற்கு மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.