Jailer 2 : ஜெயிலர் 2-வில் இணையும் ரஜினியின் ஜிகிரி தோஸ்து... அப்போ மாஸ் சம்பவம் உறுதி..!
நெல்சன் இயக்கத்தில் விரைவில் தயாராக உள்ள ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்தின் நண்பர் ஒருவர் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளாராம்.

Jailer Movie
ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணி முதன்முறையாக இணைந்து பணியாற்றிய படம் ஜெயிலர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. கடந்த ஆண்டு திரைக்கு வந்த ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், வஸந்த் ரவி, ஷிவ ராஜ்குமார், மோகன்லால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. தமிழ் சினிமாவில் கடந்தாண்டு ரிலீஸ் ஆன படங்களில் அதிக வசூல் அள்ளி சாதனை படைத்திருந்தது ஜெயிலர்.
Jailer 2
ஜெயிலர் படத்தின் அதிரி புதிரியான வெற்றிக்கு அனிருத்தின் பின்னணி இசையும் முக்கிய காரணம். இதை ரஜினிகாந்தே ஒரு விழாவில் கூறி இருந்தார். பின்னணி இசையின்றி படம் பார்த்தபோது தனக்கு படம் ஓகே-வாக இருந்ததாக கூறிய ரஜினி, அனிருத்தின் பின்னணி இசை தான் படத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் சென்றதாக ஓபனாகவே கூறி இருந்தார். ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் அதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.
இதையும் படியுங்கள்... தேர்தலில் மாஸ் வெற்றி... முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த விஜய் - ஆனா பாஜக, திமுகவுக்கு இல்ல.. யாருக்கு தெரியுமா?
Rajinikanth, Nelson
ஜெயிலர் 2 படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளை இயக்குனர் நெல்சன் மேற்கொண்டு வருகிறார். இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. மேலும் இப்படத்திற்கு ஹுகும் என பெயரிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது ஜெயிலர் 2 படத்தில் மாஸ் நடிகர் ஒருவர் நடிக்க இருக்கும் தகவலும் கசிந்துள்ளது. அந்த நடிகரை ஜெயிலர் முதல் பாகத்திலேயே நடிக்க வைக்க ஆசைப்பட்டிருந்தார் இயக்குனர் நெல்சன்.
balakrishna, Rajinikanth
அவர் வேறு யாருமில்லை தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தான். ஜெயிலர் முதல் பாகத்திலேயே அவரை போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நெல்சன் திட்டமிட்டு இருந்தாராம். ஆனால் அந்த சமயத்தில் அவர் பிசியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போனது. அதனால் ஜெயிலர் 2-ம் பாகத்தில் பாலய்யாவை முதல் ஆளாக கமிட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாலகிருஷ்ணா ரஜினியின் நண்பர் என்பதை தாண்டி, அவருக்கு தமிழ்நாட்டிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Pa Ranjith : என்னது ஆர்யா வில்லனா? அப்போ ஹீரோ யாரு? பா ரஞ்சித் போடும் பக்கா பிளான் - உருவாகும் புதிய படம்!