சோபிதா செம ஹாட்டா இருக்காங்க... ஜொல்லுவிட்ட நாகார்ஜூனா - வருங்கால மருமகளை பத்தி என்னெல்லாம் பேசிருக்காரு!
Sobhita Dhulipala : தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் நடிகர், நாகார்ஜூனா, தனது வருங்கால மருமகள் சோபிதா குறித்து பேசிய வீடியோ ஒன்று இப்பொழுது வைரலாகி வருகிறது.
ratchagan
தமிழ் திரையுலகில் "ரட்சகன்" மற்றும் "தோழா" போன்ற வெகு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஒரு நடிகர் தான் நாகர்ஜுனா. அவருடைய மனைவி அமலா மற்றும் மகன் நாக சைதன்யா ஆகிய இருவருமே நடிகர்கள் என்பது நாம் அறிந்ததே.
samantha
நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யா, தெலுங்கு திரை உலகில் தற்பொழுது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த 2010ம் ஆண்டு வெளியான "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தில், தன்னுடன் இணைந்து நடித்த நடிகை சமந்தாவை அவர் காதலித்தார். சுமார் 7 ஆண்டு காதலுக்கு பிறகு அவர்கள் 2017ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆனால் வெறும் நான்கே ஆண்டுகளில் அந்த ஜோடி விவாகரத்து பெற்றது.
sobhitha
கடந்த மூன்று ஆண்டுகளாக நாக சைதன்யா தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார், இந்த சூழலில் இன்று ஹைதராபாதில் குடும்ப நண்பர்கள் மட்டும் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில், பொன்னியின் செல்வன் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான நடிகை சோபிதாவிற்கும், சைதன்யாவிற்கும் நிச்சயதார்த்தம் நடந்தது முடிந்துள்ளது. விரைவில் அந்த ஜோடிக்கு கல்யாணமாகவுள்ள நிலையில், வீடியோ ஒன்று இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகின்றது.
actress sobhitha
சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, சோபிதா நடித்த ஒரு திரைப்பட விழாவில் பேசிய நடிகர் நாகார்ஜுனா, அந்த படத்தில் பணியாற்றியவர்கள் பற்றி பேசினார், இறுதியாக சோபிதா பற்றி பேசும்போது, "நான் இதை மேடையில் சொல்லக்கூடாது, இருந்தாலும் சொல்கிறேன். இந்த திரைப்படத்தில் சோபிதா மிக மிக ஹாட்டாக உள்ளார்" என்று பேசியுள்ளார், அந்த வீடியோ தான் இப்பொது மீண்டும் வைரலாக்கப்படுகிறது.
எதிர்காலத்தில் சோபிதா தனக்கு மருமகளாக வரப்போகிறார் என்று தெரியாமலே அவர் பேசிய அந்த வீடியோ இப்பொது பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.