- Home
- Gallery
- நாகார்ஜுனாவின் முதல் மனைவி இவங்க தானா? விவாகரத்துக்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா?
நாகார்ஜுனாவின் முதல் மனைவி இவங்க தானா? விவாகரத்துக்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா?
நடிகர் நாகார்ஜுனாவின் முதல் மனைவி குறித்து, இருவரும் ஏன் பிரிந்தனர் என்பது குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனா இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல சூப்பர் ஹிட் தெலுங்கு படங்களில் நடித்துள்ள அவர் தனது நடிப்பு திறமைக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

தமிழ், ஹிந்தி மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ள அவர் தனக்கென ஒரு தனி ரசிக பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். குறிப்பாக அவர் உச்சத்தில் போது அதிகமான பெண் ரசிகைகளை அவர் கொண்டிருந்தார்.ஆனால் நாகார்ஜுனா தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்தார்.
ஆம்.. நடிகர் நாகார்ஜுனா தனது முதல் மனைவி லக்ஷ்மியை விவாகரத்து விட்டு நடிகை அமலாவை திருமணம் செய்து கொண்டார். பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷின் சகோதரியான லக்ஷ்மியை நாகார்ஜுனா 1984-ம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் நாக சைத்னா எனினும் 1990-ம் ஆண்டு அவர் லக்ஷ்மியை விவாகரத்து செய்துவிட்டார்.
நாகார்ஜுனா மற்றும் லட்சுமி டகுபதி திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். நாகார்ஜுனாவின் தந்தை நாகேஸ்வர ராவும், லக்ஷ்மி டககுபதியின் தந்தையும் ராமாநாயுடு டகுபதி ஆகியோர் குடும்ப நண்பர்களாக இருந்தனர். அதனால் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி நாகார்ஜுனா மற்றும் லட்சுமி 1984 இல் திருமணம் செய்து கொண்டார். அவர் சினிமாவில் அறிமுகமாகும் முன்பே இந்த திருமணம் நடந்தது.
1986 ஆம் ஆண்டில், சைதன்யா பிறந்தார் மற்றும் அதன் பிறகு, நாகார்ஜுனா லக்ஷ்மியின் திருமண உறவு கடினமான பாதையில் சென்றது. இதனால் இருவரும் 1990-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.
அதே நேரத்தில், நாகார்ஜுனா 80 களின் பிற்பகுதியில் அமலா நிறைய படங்களில் நடித்தார். இதனால் நடிகை அமலாவுடன் நிறைய நேரம் செலவழித்துக்கொண்டிருந்தார். இந்த காலக்கட்டத்தில் இருவருக்கும் காதல் மலரவே முதலில் நாகார்ஜுனா அமலாவிடம் புரபோஸ் செய்தார்.
1992 ஆம் ஆண்டு நாகார்ஜுனாவும் அமலாவும் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு அகில் அக்கினேனி என்ற மகன் உள்ளார். லக்ஷ்மி மற்றும் நாகார்ஜுனா பிரிந்த பிறகு, டகுபதி மற்றும் அக்கினேனி குடும்பத்தினருக்கு இடையே பேச்சு வார்த்தை இல்லை.
ஆனால் நாக சைதன்யா தனது தந்தை அமலா மற்றும் அகில் ஆகியோருடன் நேரத்தை செலவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அகிலும் நாக சைதன்யாவும் எப்போதும் நல்ல உறவில் இருந்தனர். சைதன்யா தனது தாய் மற்றும் அவரின் 2-வது கணவருடன் சென்னையில் வளர்ந்தார், பின்னர் ஹைதராபாத்திற்கு நிரந்தரமாக குடிபெயர்ர்ந்தார்.