சிம்பிளாக நடந்த நிச்சயம்.. ஆனா கல்யாணம்.. Wedding Destination குறித்த டீப் டிஸ்கஷனில் சைதன்யா & சோபிதா!
Sobhita Dhulipala : பெரிய அளவில் ஆரவாரம் இல்லாமல், பிரபல நடிகர் நாக சைதன்யா மற்றும் சோபிதா இடையே திருமண நிச்சயம் நடந்து முடிந்தது.
Actor Nagarjuna
விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ள செலிபிரிட்டி ஜோடியாக மாறியுள்ளார்கள் பிரபல நடிகர் நாக சைதன்யா, மற்றும் பிரபல நடிகை சோபிதா துலிபாலா. கடந்த ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி, நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் இந்த ஜோடிக்கு சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஆனால் கல்யாணம் மிக விரைவில் ஊரே மெச்சும் அளவிற்கு பிரம்மாண்டமாக நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.
Actor Naga Chaitanya
தனது மகனின் திருமணம் குறித்து மனம் திறந்துள்ள நடிகர் நாகார்ஜுனா, ஆகஸ்ட் 8ம் தேதி மிகவும் விசேஷமான ஒரு நாள் என்பதால் அவசர அவசரமாக இது வீட்டாரின் சம்மதத்தோடு அன்று அந்த நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஆனால் கல்யாணம் சற்று பொறுமையாக தான் நடைபெறும். காரணம் நாக சைதன்யாவும், சோபிதாவும் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள திரைப்பட பணிகளை அவர்கள் முடித்துகொடுக்க வேண்டும், அதன் பின்னர் தான் அவர்கள் திருமணத்திற்கு தயாராவார்கள் என்று கூறியிருக்கிறார்.
Actress Sobhita Dhulipala
சோபிதா துலிபாலா குறித்து பேசிய நடிகர் நாகார்ஜுனா, எனது மகன் நாக சைதன்யாவிற்கு அறிமுகம் ஆகும் முன்னரே, சோபிதா எனக்கு அறிமுகமான ஒரு நடிகை. பழகுவதற்கு எளிமையான ஒரு பெண். இந்நிலையில் தான் எனது மகனும், சோபிதாவும் திருமணம் செய்துகொள்ள தயாராக இருப்பது எனக்கு தெரியவந்தது. இருவீட்டாரும் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் நிச்சயதார்த்தத்தை நடத்தினோம். இருப்பினும் இவர்களுடைய திருமணம் பொறுமையாகவே நடைபெறும் என்றார்.
Sobhita Dhulipala Wedding
அதே நேரம் தங்களுடைய திரைப்பட பணிகளை விரைவில் முடிக்க உள்ள நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா ஆகிய இருவரும், ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரபலமான இடத்தில் தங்கள் திருமணத்தை நடத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த இடம் முடிவு செய்யப்பட்ட பிறகு கல்யாண தேதியை இந்த நட்சத்திர ஜோடி அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.