- Home
- Gallery
- ஸ்ருதியை வைத்து மனோஜுக்கு பக்கா ஸ்கெச் போட்ட முத்து! நகை விஷயத்தில் சிக்க போகும் விஜயா! சிறகடிக்க ஆசை அப்டேட்!
ஸ்ருதியை வைத்து மனோஜுக்கு பக்கா ஸ்கெச் போட்ட முத்து! நகை விஷயத்தில் சிக்க போகும் விஜயா! சிறகடிக்க ஆசை அப்டேட்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில், மீனாவின் தங்க செயின் மற்றும் வளையல் போன்றவை எப்படி கவரிங்காக மாறியது என்று, ஸ்ருதியை வைத்து கண்டு பிடிக்க முத்து பக்கா பிளான் போட்டுள்ளார். இதுகுறித்த இன்றைய அப்டேட் பற்றி பார்க்கலாம் வாங்க.

விஜய் டிவி தொலைக்காட்சியில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாத தொடராக உள்ளது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த தொடர் வழக்கமான குடும்ப கதையை மையமாக வைத்தும் மாமியார் வசதியான மருக்களை எப்படி நடத்துகிறார், அதே போல் வசதி இல்லாத ஏழை விட்டு மருமகளை எப்படி நடத்துகிறார் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.
விஜய் டிவியில் ஒவ்வொரு வாரமும், TRP -யில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ள இந்த சீரியலில் ஹீரோவாக வெற்றி வசந்த் நடிக்க, ஹீரோயினாக கோமதி ப்ரியா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சுந்தர் ராஜன், அனிலா குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
கடந்த ஒரு வாரமாக இந்த தொடர், செலபிரஷன் மோடில் தான் சென்று கொண்டிருக்கிறது. அதாவது அண்ணாமலை தன்னுடைய அம்மாவின் 70-ஆவது பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடுகிறார். பாட்டிக்கு பலர் அவரின் மனதை தொடுவது போல் பரிசு கொடுக்க வேண்டும் என்பதற்காக, போன், டிவி, நவரத்ன மாலை என கொடுத்து அசத்துகிறார்கள்.
மீனா - முத்து இருவரும் தங்கத்தில் செயின் வாங்கி கொடுக்க நினைத்த நிலையில்... மீனாவின் தங்க நகையை மனோஜ் விற்றுவிட்டதால் அது முடியாமல் போகிறது. இதுகுறித்து கேட்ட போது விஜயா மகனை மாட்டி விடாமல் மீனாவின் மீதே பழி போட, மனோஜ் ஒன்னுமே தெரியாதது போல் இதில் இருந்து எஸ்கேப் ஆகிறார்.
ஸ்ருதி போலீசில் புகார் கொடுக்கலாம் என கூறியபோது, மனோஜ் - விஜயா இருவருக்கும் பதட்டத்தை வெளிகாட்டிக்கொள்ளாமல் சமாளித்து விட்டனர். ஆனால் முத்துவுக்கு மட்டும் இதை செய்தது மனோஜ் தான் என்பது உறுதியாக தெரிவதால், எப்படியும் மனோஜ் வாயாலேயே உண்மையை பிடுங்க வேண்டும் என ஸ்ருதியை வைத்து புதிய பிளான் ஒன்றை போடுகிறார்.
அதன்படி ஸ்ருதி, வேற குரலில்... அவர் கவரின் நகை வாங்கிய கடையில் வேலை செய்த பெண் மாதிரி பேசுகிறார். ஆரம்பத்தில் அது நான் இல்லை என மழுப்பும் மனோஜ் வாயில் இருந்து உண்மையை பிடுங்க துருவி துருவி ஸ்ருதி கேள்வி கேட்கிறார். எனவே மனோஜ் கவரிங் நகை வாங்கியது தான் தான் என ஒப்புக்கொண்டால், விஜயாவுடன் சேர்ந்து தொக்காக சிக்குவார்.