இருக்கையின் நுனியில் ரசிகர்கள்.. மிரட்டிவிட்ட கோலிவுட்டின் டாப் 4 சைக்கோ திரில்லர் படங்கள்!
Pyscho Thriller : பலருக்கும் திகில் படங்கள் பெரிய அளவில் பிடிக்காது, ஆனால் அப்படிப்பட்டவர்களை கூட ரசிக்கவைக்கும் படங்கள் தான் சைக்கோ த்ரில்லர் படங்கள்.
vettaiyadu vilaiyadu
காதல் கதை மட்டுமே பேசி வந்த பிரபல இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன், காதலோடு கொஞ்சம் சைக்கோ தனத்தையும் இணைத்த மெகா ஹிட் படம் தான் "வேட்டையாடு விளையாடு". மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி மிரட்டிய படம் அது. படத்தின் முதல் பாதி கொஞ்சம் அமைதியாக செல்ல, இரண்டாம் பாகம் முழுவதும் ராகவனின் அசுர வேட்டை தான் நடக்கும். 2006ம் ஆண்டு வெளியாகி 50 கோடி வசூல் செய்தது இந்த படம்.
இந்த அடக்க ஒடுக்கம் கூட ரொம்ப நல்லாருக்கு.. ட்ரெடிஷனல் உடையில் ஹட்டாக அசத்திய திவ்யா பாரதி!
Imaikka Nodikal
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இமைக்கா நொடிகள், கடந்த 2018ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் சுமார் 40 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார் நடிகை நயன்தாரா. அதுமட்டுமல்ல பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஒரு சைக்கோவாகவே மாறி நடித்து அசத்திய படமது.
Ratsasan
பிரபல இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான ராட்சசன் என்ற படம் மெகா ஹிட் படமாக மாறியது. கிறிஸ்டோபர் என்ற அந்த கதாபாத்திரத்தை இன்றளவும் யாராலும் மறக்கவே முடியாது என்றே கூறலாம். இளம் பெண்களை காப்பாற்ற ஹீரோ போராடும் ஒவ்வொரு கட்சிகளும் அவ்வளவு நேர்த்தியாக அந்த படத்தில் அமைக்கப்பட்டிருக்கும். விஷ்ணு, காளி வெங்கட் மற்றும் முனீஷ் என்று அனைவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்.
Udhayanidhi Stalin
இளையராஜா இசையில் கடந்த 2020ம் ஆண்டு பிரபல இயக்குனர் மிஸ்க்கின் இயக்கத்தில் வெளியான படம் தான் சைக்கோ. இளம் வயதில் மனதில் ஏற்படும் தாக்கத்தால் ஒருவரின் வாழ்கை எப்படியெல்லாம் திசைமாறும் என்பதை எடுத்துக்காட்டிய ஒரு படம். நடிகர் உதயநிதி, நடிகை அதிதி ராவ் மற்றும் வில்லன் ராஜுக்குமார் பிச்சுமணி என்று அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்.
இன்னும் ஒரே நாள் தான்.. அடுத்த மாஸ் சம்பவத்துக்கு ரெடியான வெங்கட் - GOAT ட்ரைலர் அப்டேட் இதோ!