தனுஷ் நடித்துள்ள 'ராயன்' படத்தை ஏன் பார்க்க வேண்டும்? 5 முக்கிய காரணங்கள் இதோ..!
நடிகர் தனுஷ் இயக்கி - நடித்து, இன்று (26.7.2024) உலகம் முழுவதும் வெளியாகி உள்ள, ராயன் திரைப்படத்தை ரசிகர்கள் ஏன் பார்க்க வேண்டும் என்கிற, ஐந்து காரணங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Dhanush Acting and Direction:
தமிழ் சினிமாவில் நடிப்பு அசுரன் என பெயர் எடுத்த தனுஷ், பன்முக திறமையாளராக அறியப்படுகிறார். இவர் ஏற்கனவே பா பாண்டி என்கிற படத்தை இயக்கி நடித்திருந்த நிலையில், தற்போது தன்னுடைய 50-ஆவது படத்தை, முற்றிலும் மாறுபட்ட கதைகளத்தில் இயக்கியுள்ளார். நடிப்பிலும், இயக்கத்திலும் மிரட்டியுள்ள 'ராயன்' படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
SJ Suryah Acting:
வாலி, குஷி, போன்ற திரைப்படங்களால் ரசிகர்கள் மனதை கவர்ந்த எஸ் ஜே சூர்யா, சமீப காலமாக தன்னுடைய மேஜிக்கான நடிப்பு மற்றும் பாடி லாங்குவேஜ் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் இன்று வெளியாகி உள்ள, 'ராயன்' படத்தில் வில்லனாக நடித்துள்ளார். எனவே தனுஷுக்கு நிகரான வில்லன் வேடத்தில் எஸ் ஜே சூர்யா நடித்துள்ளதாக கூறப்படுவதால்,இந்த வருடத்தின் பெஸ்ட் வில்லன் என்கிற பட்டியலில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பு இணையுமா? என்பதை அரிய இப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
Big Stars Combo:
தனுஷ் இயக்கி, நடித்துள்ள 'ராயன்' படத்தில் எஸ் ஜே சூர்யா மட்டுமின்றி, ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. குறிப்பாக சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், சரவணன், பிரகாஷ்ராஜ், செல்வராகவன் போன்ற மிக முக்கிய கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர். இவர்களை இப்படத்தில் தனுஷ் எப்படி பயன்படுத்தியுள்ளார் என்பதை நினைக்கும் போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறுகிறது.
Action Treat:
'ராயன்' திரைப்படம் வடசென்னை கதை களத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆக்சன் திரைப்படமாகும். அதிகப்படியான ஆக்ஷன் காட்சிகள் உள்ளதால், இப்படத்திற்கு A சான்றிதழ் சென்சாரில் வழங்கப்பட்டுள்ளது. எனவே ஆக்சன் திரைப்படத்தை விரும்பிபார்க்கும் ரசிகர்களுக்கு இப்படம் செம ட்ரீட் ஆக இருக்கும் என கூறப்படுகிறது. அதை போல் ராயன் என்கிற தனுஷின் கதாபாத்திரம் இறக்கமற்ற ராவணனின் கதாபாத்திரத்துடன் ஒப்பிடப்படும் ரோல் என்றும் கூறப்படுவதால், தனுஷ் இப்படத்தில் ஹீரோவா - வில்லனா? என்பதை அறிந்து கொள்வதிலும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
மும்பையில் ஆடம்பர அப்பார்ட்மெண்ட்டை வாங்கிய மாதவன்.. தலைசுற்ற வைக்கும் விலை..
AR Rahman Music:
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் தனுஷ் நடிப்பில் உருவான 'மரியான்' படத்திற்கு பின்னர், சுமார் 11 வருடங்களுக்குப் பின் மீண்டும் தனுஷ் உடன் இணைந்து பணியாற்றி உள்ள திரைப்படம் ராயன். ஏற்கனவே ராயன் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மனதை வருடும் விதத்தில் இருந்த நிலையில், இந்த படத்தின் பிஜிஎம் எப்படி இருக்கும் என்பதை உணர்வதற்கு கண்டிப்பாக இப்படத்தை ரசிகர்கள் திரையரங்கில் பார்க்க வேண்டும்.