புதிய தலைமைச் செயலாளர் முருகானந்தம்.? யார் இவர்.? யாருடைய செலக்சன் தெரியுமா.?
சிவ்தாஸ் மீனாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக நா.முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1991-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பணியில் சேர்ந்த முருகானந்தம், கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
தலைமைச்செயலாளர் மாற்றம்
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து சிவ்தாஸ் மீனா மாற்றப்பட்டுள்ளார். அவர் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக புதிய தலைமை செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்தநிலையில் புதிய தலைமை செயலாளர் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதிய தலைமை செயலாளர் யார்.?
அதன் படி தமிழக அரசின் 50-ஆவது தலைமைச் செயலராக முதல்வரின் செயலர்களில் ஒருவரான நா.முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஐஏஎஸ் பிரிவு அதிகாரியான இவர் சொந்த ஊர் சென்னையாகும், பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரியான இவர் 1991-ஆம் ஆண்டு ஐஏஎஸ் படிப்பில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தார். கூடுதல் ஆட்சியர், அரசு துறை இணை செயலாளர் என பல பதவிகளை வகித்தவர், கடந்த 2001 முதல் 2004-ஆம் ஆண்டு வரை கோவை மாவட்ட ஆட்சியராக சிறப்பாக பணியாற்றினார்.
முதல்வரின் தனிச்செயலாளர் முருகானந்தம்
ஊரக வளர்ச்சித் துறையின் இணைச் செயலர், தில்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையர், தொழில் துறை, நிதித் துறைகளின் செயலர் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். தற்போது கூடுதல் தலைமைச் செயலர் பொறுப்பில் இருக்கும் முருகானந்தம் முதலமைச்சர் ஸ்டாலினின் தனி பிரிவுச் செயலர் 1-ஆக பணியில் உள்ளார். இந்த நிலையில் தான் தமிழக அரசின் தலைமைச் செயலராக முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா திடீர் மாற்றம்! அடுத்து வருபவர் யார்?
MK Stalin
முதலமைச்சரின் குட் புக்கில் முருகானந்தம்
தொழில் துறையில் சிறந்த விளங்கிய முருகானந்தம் பல்வேறு தொழில் முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். முதலமைச்சரின் தனி செயலாளராக பணியாற்றிவர் அரசு அதிகாரிகள் மத்தியில் குட் புக்கில் இடம்பெற்றுள்ளார். இவரது சிறப்பான பணிக்கு பரிசாகவே தலைமை செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.