Anand Piramal : சத்தம் இல்லாமல் சாதித்த முகேஷ் அம்பானி மருமகன்; அப்படி என்ன செய்தார்?
அம்பானி வாரிசுகளான ஆனந்த் மற்றும் ஆகாஷ் கூட இதுவரை அடையாத ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை அம்பானி மருமகன் ஆனந்த் பிராமல் செய்துள்ளார்.

அம்பானி வீட்டு திருமணக் கொண்டாட்டங்கள் ஒருவழியாக கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்டின் திருமணம் உலகம் முழுவதும் கவனம் ஈர்த்தது. இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதனால் அம்பானி குடும்பம் தொடர்ந்து தலைப்பு செய்திகளில் இடம்பிடித்து வந்தது.
இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் மருமகன் ஆனந்த் பிராமல் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். ஆம். அம்பானி வாரிசுகளான ஆனந்த் மற்றும் ஆகாஷ் கூட இதுவரை அடையாத ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை அவர் எட்டி உள்ளார்.
பிராமல் குழுமத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வரும் ஆனந்த் பிராமல் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் அவர் 40 வயதிற்குட்பட்ட இந்தியாவின் பிரகாசமான இளம் வணிகத் தலைவர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இந்த அங்கீகாரம் மதிப்புமிக்க 40 Under Forty என்ற நிறுவனத்திடமிருந்து கிடைத்துள்ளது.
இந்த சாதனை ஆனந்த் பிராமலை வணிக உலகில் உள்ள மற்ற குறிப்பிடத்தக்க பெயர்களுடன் இணைத்துள்ளது, கவுதம் அதானியின் மகன் ஜீத் அதானி உட்பட பலர் உள்ள இந்த பட்டியலில் ஆனந்த் பிராமலும் இணைந்துள்ளார்ல்
அந்தந்த துறைகளில் தனித்துவமான தலைமைத்துவம், புதுமை மற்றும் தாக்கத்தை வெளிப்படுத்திய இளம் தலைவர்களை அடையாளம் கண்டு கெளரவிப்பதற்காக '40 அண்டர் ஃபார்டி' பட்டியல் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் தற்போது அம்பானியின் மருமகன் இணைந்துள்ளது வணிக நிலப்பரப்பில் அவரது வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் பங்களிப்புகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.