1984-ல் சிம்பிளாக நடந்த திருமணம்.. முகேஷ் - நீதா அம்பானியின் வெட்டிங் போட்டோஸ் வைரல்..
1984ல் எளிய முறையில் நடந்த முகேஷ் மற்றும் நீதா அம்பானியின் திருமண விழாவின் சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அம்பானி குடும்பத்தின் செல்வம் மற்றும் செல்வாக்கு பற்றிய பல்வேறு தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. அம்பானி குடும்பத்தினர் இப்போது மும்பையில் உள்ள ‘ஆண்டிலியா’ என்ற புகழ்பெற்ற 27 மாடிகள், 570 அடி உயரம், 400,000 சதுர அடி மாளிகையில் வசிக்கின்றனர்.
அம்பானி குழந்தைகளின் ஆடம்பரமான திருமணங்களை நாம் பார்த்திருக்கிறோம், ஆனால் முகேஷ் அம்பானி மற்றும் நீதாவின் திருமணத்தின் புகைப்படங்களை சிலர் மட்டுமே பார்த்திருப்பார்கள்.
mukesh ambani love story
1984ல் எளிய முறையில் நடந்த முகேஷ் மற்றும் நீதா அம்பானியின் திருமண விழாவின் சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரவீந்திரபாய் தலால் மற்றும் பூர்ணிமா தலால் தம்பதியின் மகள் தான் நீதா தலால்.
வணிகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற நீதா. சிறு வயதிலிருந்தே பரதநாட்டியம் கற்று வந்த அவர்,, இறுதியில் ஒரு தொழில்முறை நடனக் கலைஞரானார்.
ஆசிரியராக பணியாற்றிய போது தான் முகேஷ் அம்பானியை சந்தித்தார் நீதா. முகேஷின் தந்தை திருபாய் அம்பானி, ஒரு நடன நிகழ்வில் நீதா நடனமாடுவதைப் பார்த்து, அவர் தனது மகனுக்குப் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்தார்.
இதை தொடர்ந்து முகேஷ் - நீதா திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகும், நீதா சில ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
அந்த காலக்கட்டத்தில் அம்பானி குடும்பம் உலக பணக்கார குடும்பங்களில் ஒன்றாக அம்பானி குடும்பம் இல்லை. எனவே அப்போது முகேஷ் - நீதா தம்பதி எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.
அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் தங்கள் திருமணத்திற்கு தயாராகி வருகின்றனர், ஆனால் அதற்கு முன், அவர்கள் உலகெங்கிலும் உள்ள விருந்தினர்களுடன் கடந்த 3 நாட்களாக சொகுசு கப்பலில் மற்றொரு ப்ரீ வெட்டிங் நிகழ்வை நடத்தினர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், குஜராத்தின் ஜாம்நகரில் அனந்த் - ராதிகாவின் முதல் ப்ரீ வெட்டிங் விழா நடைபெற்றது. இதில் பாலிவுட், விளையாட்டு மற்றும் தொழிலதிபர்கள் என பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நட்சத்திரங்களின் கவனத்தை ஈர்த்தது.
anant ambani
அனந்த் அம்பானி மற்றும் அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் ஜூலை 12-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கு ரூ.1200 முதல் ரூ.1500 கோடி வரை செலவாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.