வெயில் கொஞ்சம் ஓவரு தான் – கூலிங் கிளாஸ் அணிந்து விளையாடிய தல தோனி – ஸ்டைலுன்னு கமெண்ட்!
சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 61ஆவது லீக் போட்டியில் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி கூலிங் கிளாஸ் அணிந்து விளையாடியுள்ளார்.

Chennai Super Kings vs Rajasthan Royals, 61st Match
எப்போதுமே ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவானது ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும். இது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருக்கும். பகலில் கிரிக்கெட் விளையாடுவது என்பது சற்று சிரமமான ஒன்று தான். அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் தொடரின் கடைசி லீக் தொடர் நடைபெற்று வருகிறது.
Chennai Super Kings vs Rajasthan Royals, 61st Match
இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் ஆமை வேகத்தில் விளையாடி 141 ரன்கள் மட்டுமே எடுத்தது.
Chennai Super Kings vs Rajasthan Royals, 61st Match
இதில், அதிகபட்சமாக ரியான் பராக் மட்டுமே 47 ரன்கள் எடுத்தார். துருவ் ஜூரெல் 28 ரன்கள் எடுக்க, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்கள் எடுத்தார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் சிமர்ஜீத் சிங் 3 விக்கெட்டும், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
Chennai Super Kings vs Rajasthan Royals, 61st Match
இந்த நிலையில் தான் இந்தப் போட்டியின் போது வெயிலின் தாக்கம் காரணமாக விக்கெட் கீப்பரான தோனி கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு விளையாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்த சிஎஸ்கே நிர்வாகம் ஸ்டைலுன்னு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Chennai Super Kings vs Rajasthan Royals, 61st Match
142 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது விளையாடி வருகிறது. தற்போது வரையில் 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.