- Home
- Gallery
- நிறைமாத நிலவாக எம்.எஸ்.பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா! வைரலாகும் பிரக்னன்ஸி போட்டோ ஷூட் புகைப்படங்கள்!
நிறைமாத நிலவாக எம்.எஸ்.பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா! வைரலாகும் பிரக்னன்ஸி போட்டோ ஷூட் புகைப்படங்கள்!
பிரபல நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா தற்போது நிறைமாத கர்ப்பமாக இருக்கும் நிலையில்... தன்னுடைய பிரக்னன்ஸி போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரபல டப்பிங் கலைஞரும் குணச்சித்திர நடிகருமான எம்எஸ் பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கர் தற்போது கர்ப்பமாக இருக்கும் தகவலை அவரது பிரக்னன்சி போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு அறிவித்துள்ளார். இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகர் என்று பெயர் எடுத்தவர் எம்.எஸ்.பாஸ்கர். இவர் ஒரு டப்பிங் கலைஞராக இருந்து பின்னர் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்த துவங்கினார்.
குறிப்பாக சன் டிவியில் இவர் நடிப்பில் வெளியான 'அழகி', 'சின்ன பாப்பா பெரிய பாப்பா', 'கங்கை யமுனா சரஸ்வதி', 'செல்வி' போன்ற சீரியல்களில் இவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரம், எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்புக்கு தீனி போடும் விதத்தில் அமைந்தது.
கடந்த 15 வருடங்களாக, முழுக்க முழுக்க வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வரும் எம்.எஸ்.பாஸ்கர்... தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களிலும், ஸ்மால் பட்ஜெட் படங்களிலும் அழுத்தமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
மிதமான மேக்கப்பில்.. பச்சை நிற சல்வாரில் பாடாய் படுத்தும் பேரழகி..! வாணி போஜன் கியூட் போட்டோஸ்!
ஹரீஷ் கல்யாணுடன் இவர் நடித்து சமீபத்தில் வெளியான பார்க்கிங் படத்தில் இவரது கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் இவரின் கைவசம் சுமார் 10 படங்கள் உள்ளன. இதில் வடக்குப்படி ராமசாமி, பூமர் அங்கிள், டபுள் டக்கர் போன்ற சில படங்கள் வெளியாகிவிட்ட நிலையில், விரைவில் 'BOAT' திரைப்படம் வெளியாக உள்ளது.
நடிகர் எம்.எஸ்.பாஸ்கரை தொடர்ந்து அவரின் மகள் ஐஸ்வர்யாவும் தற்போது டப்பிங் கலைஞராக இருக்கிறார். கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பல முன்னணி இளம் நடிகைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.
தனுஷ் நடிப்பில் வெளியான 'ராயன்' படத்தின் முதல் நாள் வசூலே இத்தனை கோடியா? தெறிக்கவிட்ட கலெக்ஷன்!
அதே போல் எம் எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரும் 96 திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். மேலும் தொடர்ந்து அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஹாட் ஸ்பாட் படம் நல்ல வரவேற்பை பெற்றது.
எம் எஸ் பாஸ்கர் சிறந்த நடிகர் என்பதை தாண்டி ஒரு சிறந்த தந்தையாகவும், சமூக ஆர்வலராகவும் பார்க்கப்படுகிறார். திரைக்கு அப்பால் நடக்கும் பல்வேறு அநீதிகளுக்கு தன்னுடைய அறிக்கை மூலம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் எம்.எஸ். பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், தொழிலதிபர் சுதாகர் என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்து முடிந்தது. இவருக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது ஐஸ்வர்யா நிறைமாத கர்ப்பமாக உள்ளார். இதுவரை அந்த தகவலை ரகசியமாக வைத்திருந்த ஐஸ்வர்யா, தற்போது முதல் முறையாக பிரக்னன்சி போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.