- Home
- Gallery
- தென்னிந்தியாவில் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்த படங்கள்.. ரஜினி, பிரபாஸ் இருக்காங்க.. விஜய் இல்லையா!
தென்னிந்தியாவில் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்த படங்கள்.. ரஜினி, பிரபாஸ் இருக்காங்க.. விஜய் இல்லையா!
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட சினிமாவை உள்ளடக்கிய தென்னிந்திய சினிமா கடந்த சில வருடங்களில் வசூல் சாதனை செய்து வருகிறது. இதுவரை தென்னிந்தியாவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

600 Crore Club South Indian Movies
இயக்குனர் நாக் அஷ்வின் மற்றும் பிரபாஸ் நடித்த கல்கி 2898 AD திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடி வசூலை தாண்டி போய் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இப்படம் ஐந்து நாட்களில் 343 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
Kalki 2898 AD
மற்ற மொழிகளுடன் ஒப்பிடும்போது தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகள் பெரும் வெற்றியை பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது. பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோன் நடித்துள்ள கல்கி வசூல் மழையை பொழிந்து வருகிறது.
Prabhas
இதுவரை தென்னிந்தியாவில் 600 கோடிக்கும் மேல் வசூலான திரைப்படங்கள் என்னென்ன, அந்த பட்டியலில் எந்தெந்த நடிகர்கள் இடம்பெற்றுள்ளார்கள் என்று பார்க்கலாம்.
Baahubali 2
தென்னிந்திய ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்கள் பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி, பாகுபலி 2ம் பாகம் இடம்பெற்றுள்ளது.
RRR
அடுத்த இடத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியான 2.0 படமும், அடுத்த இடத்தை ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் இடம்பெற்றுள்ளது.
Rajinikanth
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் வெளியாகி அதிரிபுதிரி ஹிட் அடித்த கே.ஜி.எப் படத்தின் 2ம் பாகம் மற்றும் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படமும் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது.
Salaar
பிரபாஸ் மற்றும் பிரசாந்த் நீல் கூட்டணியில் வெளியான சலார் படம் மற்றும் தற்போது பிரபாஸ், திஷா பதானி நடிப்பில் வெளியாகி உள்ள கல்கி படமும் இப்பட்டியலில் உள்ளது.
Vijay
தென்னிந்திய சினிமாவில் ரூபாய் 600 கோடிக்கும் மேல் வசூலான படங்களின் பட்டியலில் பிரபாஸ் 4 படங்களையும், ரஜினிகாந்த் 2 படங்களையும், மற்றவர்கள் 2 படங்களையும் பெற்றுள்ளார்கள். இந்த பட்டியலில் விஜய் இல்லை.
ராஜமௌலி இல்லை.. ஷங்கர் இல்லை.. இந்தியாவின் பணக்கார திரைப்பட இயக்குனர் இவர்தான்.. யாரு தெரியுமா?