படம் காட்டு மொக்கை.. அதுக்கு அவங்க என்ன பண்ணுவாங்க? ட்ரோல் செய்யப்பட்ட Top நடிகை - சப்போர்ட் பண்ணும் BS மாறன்!
Blue Sattai Maran : படம் மொக்கையாக இருப்பதற்கு அதில் நடித்த நடிகையை மட்டும் குறைசொல்வது சரியல்ல என்று கூறியுள்ளார் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்.
priya
சென்னையில் பிறந்து வளர்ந்து பிரபல செய்தி நிறுவனத்தில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கியவர் தான், பிரியா பவானி சங்கர். B.Tech முடித்துவிட்டு எம்பிஏ பயின்றுள்ள அவருக்கு வயது 34.
actress priya
தமிழ் திரை உலகில் "மேயாத மான்" திரைப்படம் மூலம் அறிமுகமான ப்ரியா பவானி சங்கர், தொடர்ச்சியாக "கடை குட்டி சிங்கம்", "மான்ஸ்டர்", "மாபியா" மற்றும் "களத்தில் சந்திப்போம்" போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். ஒரு சில தெலுங்கு புகைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.
priya bhavani shankar
ஆனால் கடந்த சில காலமாகவே இவருடைய நடிப்பில் வெளியான "10 தல", "ருத்ரன்", "ரத்தினம்" மற்றும் இந்தியன் 2 போன்ற திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றியடையாத நிலையில், அவர் ஒரு ராசி இல்லாத நடிகை என்று கூறி பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டார். அதற்கு தன்னுடைய வருத்தங்களையும் பிரியா பவானி சங்கர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
blue sattai maran
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், "ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக மாறியிருக்கிறது. ஆனால் "ருத்ரன்", "ரத்னம்" மற்றும் இந்தியன் 2 போன்ற திரைப்படங்கள் காட்டு மொக்கையாக இருப்பதனால் தான் படம் ஓடவில்லை, அதற்கு அவர் என்ன செய்வார்" என்று பிரியா பவானி சங்கருக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.