- Home
- Gallery
- புர்ஜ் கலீஃபா அபார்ட்மென்ட்.. சொகுசு கார்கள்.. நடிகர் மோகன்லாலின் சொத்து மதிப்பு எவ்வளவு?
புர்ஜ் கலீஃபா அபார்ட்மென்ட்.. சொகுசு கார்கள்.. நடிகர் மோகன்லாலின் சொத்து மதிப்பு எவ்வளவு?
மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டாராக இருக்கும் மோகன்லால் புர்ஜ் கலீஃபா அபார்ட்மென்ட் முதல் சொகுசு கார்கள் வரை பலவற்றை குவித்து வைத்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Mohanlal Net Worth
மே 21ஆம் தேதி பிறந்த நடிகர் மோகன்லால் மலையாள சினிமாவின் முகமாக திகழ்கிறார். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக நடித்து வரும் மோகன்லால் தென்னிந்தியத் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என சிறந்து விளங்குகிறார்.
Actor Mohanlal
நடிகர் மோகன்லால் ஆண்டு வருமானம் $50 மில்லியன் என்று கூறப்படுகிறது. சுமார் ரூ.376 கோடிக்கும் மேல் சொத்துக்களை வாங்கி குவித்து வைத்துள்ளார் நடிகர் மோகன்லால். மலையாளத் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கும் மோகன்லால், ஒரு திரைப்படத்திற்கு 10-15 கோடி ஊதியமாக வாங்கி வருகிறார்.
Mohanlal Cars Collection
சமீபத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள விலையுயர்ந்த ரேஞ்ச் ரோவர் காரை வாங்கினார். இது தவிர, 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள Toyota Vellfire, 1.36 கோடி ரூபாய் மதிப்புள்ள Toyota Land Cruiser, சுமார் 78 லட்சம் ரூபாய் விலையில் வரும் Mercedes Benz GL350, சுமார் INR 4 கோடிக்கு Lamborghini Urus ஆகியவற்றையும் வைத்திருக்கிறார்.
கோடிக்கணக்கில் புரளும் பாலய்யா.. என்.டி.ஆர் மகன் பாலகிருஷ்ணா சொத்து மதிப்பு எவ்வளவு?
Mohanlal Earnings
மோகன்லால் விலையுயர்ந்த கடிகாரங்களின் தொகுப்பை வைத்துள்ளார். 75-80 லட்சம் ரூபாய் வரை விலையுள்ள Patek Philippe Aquanaut, ரிச்சர்ட் மில்லே 11-03 McLaren, இதன் விலை ரூ.45 லட்சத்தில் தொடங்குகிறது. ரோலக்ஸ் Yacht-Master, Montblanc Orbis Terrarum World Time போன்ற லட்சக்கணக்கான மதிப்புள்ள கைக்கடிகாரங்களை வைத்துள்ளார்.
Burj Khalifa Apartment
நடிகர் மோகன்லால் உலகின் மிக உயரமான புர்ஜ் கலீஃபாவில் ஒரு பிளாட் வைத்திருப்பதாக ஆங்கில ஜாக்ரன் நியூஸ் தெரிவித்தது. இதன் மதிப்பு குறித்த விவரம் வெளியாகவில்லை. ஒட்டுமொத்தமாக ரூ.410 கோடிக்கும் மேல் சொத்துக்களை வைத்துள்ளார் நடிகர் மோகன்லால்.