- Home
- Gallery
- ஒரு வாரம் ஆகியும் ஓயாத கூட்டம்.. சூரியின் கருடன் படத்தால் கப்சிப்னு ஆன மோகனின் ஹரா - பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
ஒரு வாரம் ஆகியும் ஓயாத கூட்டம்.. சூரியின் கருடன் படத்தால் கப்சிப்னு ஆன மோகனின் ஹரா - பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
மோகன் நடித்த ஹரா மற்றும் சூரி நாயகனாக நடித்து வெளியாகி உள்ள கருடன் ஆகிய படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

garudan
விடுதலை படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் சூரி. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அவருக்கு தொடர்ந்து ஹீரோவாக நடிக்க சான்ஸ் குவிந்து வருகிறது. தற்போது அவர் நடிப்பில் கருடன் என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் சூரி நாயகனாக நடிக்க அவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
Garudan Box Office
கருடன் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருவதால் பாக்ஸ் ஆபிஸில் அப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் முதல் வாரம் முடிவில் கருடன் திரைப்படம் ரூ.30 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து மாஸ் காட்டி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த ரஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படம் மொத்தமாக கூட இந்த வசூலை குவிக்காத நிலையில், சூரியின் படம் முதல் வாரத்திலேயே 30 கோடி வசூலித்து மாஸ் காட்டி இருக்கிறது.
இதையும் படியுங்கள்...40 வயதுக்கு மேலாகியும் திருமணமாகல... பாகுபலி நடிகருடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய நடிகையா இது? ஆனா திரிஷா இல்ல
Haraa
கருடன் படத்துக்கு போட்டியாக இந்த வாரம் வெள்ளி விழா நாயகன் மோகன் நடித்த ஹரா திரைப்படம் திரைக்கு வந்தது. விஜய் ஸ்ரீ இயக்கி இருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் கருடன் படத்துக்கு டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹரா படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி இப்படம் முதல் நாளில் ரூ.50 லட்சம் மட்டுமே வசூலித்து உள்ளதாம். இது மோகன் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
Haraa vs garudan
கருடன் படம் முதல் நாளில் ரூ.4.25 கோடி வசூலித்திருந்த நிலையில், மோகன் நடித்த ஹரா திரைப்படம் அதில் 10 சதவீதம் மட்டுமே வசூலித்து இருக்கிறது. மோகன் மலைபோல் நம்பி இருந்த ஹரா படம் பாக்ஸ் ஆபிஸில் சொதப்பி உள்ளதால், அவர் அடுத்ததாக நடித்துள்ள கோட் திரைப்படம் தான் மோகனுக்கு கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக மோகன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஒரு ஃபிளாப் கூட இல்ல.. எல்லாமே பிளாக்பஸ்டர்.. 2000 கோடி வசூலுடன் இருக்கும் வெற்றி இயக்குனர்.. அட்லீ இல்ல..