நடந்துருச்சு.. எதிர்பார்த்தது நடந்திருச்சு.. JRன் மிருதன் 2 - விரைவில் வரப்போகும் சிறப்பான அப்டேட்!
Miruthan 2 : பிரபல இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில், கடந்த 2016ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ஜெயம் ரவியின் திரைப்படம் தான் மிருதன்.
Lakshmi menon
அந்த திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றாலும் கூட, ஜெயம் ரவியின் ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ஒரு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக பெரிய அளவில் காத்திருக்கிறார்கள் என்றால் அது மிருதனின் இரண்டாம் பாகத்திற்காகத் தான்.
ஹெல்மென்ட் போடாமல் பேட்டி கொடுத்து Fine கட்டிய பிரஷாந்த்! செய்தியாளர் சந்திப்பில் கொடுத்த விளக்கம்!
actor jayam ravi
பிரபல நடிகர் ஜெயம் ரவி, லட்சுமி மேனன், அனிகா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்த அந்த திரைப்படம் Zombieகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. அந்த படத்தின் இறுதி காட்சியில் நாயகியை காப்பாற்ற நாயகனும் சாம்பியாக மாறுவது போல கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும்.
Miruthan
இந்நிலையில் சுமார் 8 ஆண்டுகள் கழித்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் அந்த திரைப்படம் தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.
miruthan 2
ஏற்கனவே பல முன்னணி நடிகர்களின், திரைப்படங்களின் இரண்டாம் பாகம் உருவாகி வரும் நிலையில், நடிகர் ஜெயம் ரவியும் அந்த வரிசையில் இணைந்துள்ளார். மிருதன் படம் போல, JRன் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி வருகின்றது.
நான் புஷ்பாவா மாறியது எப்படினு தெரிஞ்சுக்கணுமா? இளசுகளை கிறங்கடிக்கும் போட்டோஸ் வெளியிட்ட அஞ்சலி!