- Home
- Gallery
- கோவிலுக்கு குடும்பத்தோடு செல்லும் ஷண்முகத்துக்கு காத்திருந்த ஷாக்! நடக்க போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!
கோவிலுக்கு குடும்பத்தோடு செல்லும் ஷண்முகத்துக்கு காத்திருந்த ஷாக்! நடக்க போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!
ஜீ தமிழிலில் இந்த வாரம் TRP-யில் முதலிடத்தை பிடித்த அண்ணா சீரியல் பரபரப்பான தருணங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், சூடாமணி நேற்று இசக்கியை பார்க்க ஆசைப்பட்டதால், கோவிலுக்கு செல்ல முடிவிடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன? என்று பார்க்கலாம் வாங்க.

தன்னுடைய குடும்பத்தை பார்க்க கோவிலுக்கு செல்வதால், இசக்கி, முத்துப்பாண்டி எடுத்து கொடுத்த புடவையை கட்டி கொண்டு வந்து, நல்லா இருக்கா என்று கேட்க... அதற்க்கு முத்துபாண்டியும் நன்றாக இருப்பதாக சொல்கிறான். அதே போல் மறுபக்கம் பல வருடத்திற்கு பின்னர், வைகுண்டம் எடுத்து கொடுத்த புடவையை சூடாமணி கட்டி வர, அதை பார்த்து வைகுண்டமும் மனநிறைவோடு சந்தோசப்படுகிறார்.
மகளை பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் சூடாமணி முதல் ஆளாக கோவிலுக்கு தயாராகி இருப்பதை பார்த்து, சண்முகத்தின் தங்கைகள்... இன்னைக்கு அண்ணன் வந்து, கோவிலுக்கு கூப்பிட்டா கூட போக கூடாது என்று முடிவெடுக்கின்றனர். பரணி இதை பார்த்து விடுகிறாள். ஆனால் இதனை அவர்களிடம் வெளிப்படுத்தி கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்து வருகிறார்.
இசக்கியும், பாக்கியமும் கோவிலுக்கு தயாராகி இருக்கும் நிலையில், திடீர் என சௌந்தராண்டி நானும் உங்களோட கோவிலுக்கு வரேன் என்று சொல்கிறார். மேலும் சூடாமணி தங்கச்சிகளையும் கோவிலுக்கு கூப்பிடு என்று சொல்ல, ஷண்முகம் வேண்டாம் என்று சொல்ல... பரணி நீ போய் கூப்பிடு என்று சொல்கிறாள். ஷண்முகம் புரியாமல் பேசாத என்று சொல்ல, நீ கூப்பிட்டாலும் அவங்க வர மாட்டாங்க என்று சொல்கிறாள். பிறகு ஷண்முகம் கூப்பிட தங்கைகளும் வரவில்லை என்று சொல்லி விடுகின்றனர்.
பிறகு ஷண்முகம், சூடாமணி, பரணி, வைகுண்டம் ஆகியோர் கிளம்ப... இசக்கி போன் செய்து சௌந்தரபாண்டியும் கோவிலுக்கு வரும் தகவலை சொல்லி சண்முகத்துக்கு ஷாக் கொடுக்கிறார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்கு முன், தங்கைகளும் தயாராகி கோவிலுக்கு வருவதாக கூறி ஷாக் கொடுக்கின்றனர்.
Amaran: Amaran : தீபாவளி ரேசில் இணைந்த சிவகார்த்திகேயன்! 'அமரன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அடுத்து இரண்டு குடும்பமும் கோவிலுக்கு கிளம்பி வருகின்றனர். ஒரு பக்கம் வைகுண்டம் சூடாமணிக்கு தன்னுடைய கைகளால் பூ வாங்கி கொடுத்து, அதனை வைத்தும் விடுகிறார். இன்னொரு பக்கம் முத்துப்பாண்டி இசக்கிக்கு பூ வாங்கி கொடுக்க, பாக்கியம் அதை தலையில் வைத்து விட சொல்ல முத்துபாண்டியும் வைத்து விடுகிறான். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வார்களா? என்கிற பரபரப்பு ஒரு பக்கம் இருக்க... மற்றொருபுறம் சௌந்தரபாண்டியும் சனியனும் கோவிலுக்குள் வர ஒருத்தரும் கண்டு கொள்ளாததால் டென்சன் ஆகிறார். கோவிலில் நடக்க போவது என்ன என்பதை தெரிந்து கொள்ள அண்ணா சீரியலை தொடர்ந்து பாருங்கள்.