- Home
- Gallery
- Anna Serial: ஷண்முகம் குத்தியதால் உயிருக்கு போராடும் பாக்கியம்! சூடாமணியின் மரண செய்தி.. அண்ணா சீரியல் அப்டேட்
Anna Serial: ஷண்முகம் குத்தியதால் உயிருக்கு போராடும் பாக்கியம்! சூடாமணியின் மரண செய்தி.. அண்ணா சீரியல் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் சௌந்தரபாண்டியை குத்த செல்ல சூடாமணி இறந்து விட்டது போல் தகவல் பரவிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, சூடாமணி இறந்து போனதாக தகவல் பரவ பாண்டியம்மா என்னனமோ நிரூபிக்கணும்னு சொன்னா ஆனால் ஒண்ணுமே நடக்காமல் செத்து போய்ட்டா என்று சந்தோசப்பட சூடாமணி அலறி எழுந்து கொள்ள அது கனவு என்று தெரிய வருகிறது.
இதையடுத்து சூடாமணி நான் நிரூபிக்க வேண்டியது நிறைய இருக்கு அது எல்லாமே நடக்கணும். குறிப்பாக அந்த சௌந்தரபாண்டி தான் நகையை திருடியாதுனு நிரூபிக்கனும், 20 வருஷமா பிரிந்து இருக்கிற என் பிள்ளைகளோடு சேர்ந்து இருக்கனும் என்று வேண்டுகிறாள்.
தீபாவை தேடும் கார்த்திக்.. பொய் சொல்லும் ரம்யா.! அடுத்து நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்!
அதன் பிறகு ஷண்முகம் ஆவேசமாக வந்து சௌந்தரபாண்டியை குத்த போக பரணி தடுக்க முயற்சி செய்ய ஒரு கட்டத்தில் பாக்கியம் குறுக்கே வந்து நிற்க ஷண்முகம் சௌந்தரபாண்டியை குத்த போய் கடைசியில் கத்தி பாக்கியத்தின் வயிற்றில் இறங்குகிறது.
Anna Serial
இதனால் பரணி பதறி போக முத்துப்பாண்டி அம்மாவுக்கு கத்திக்குத்து நடந்ததும் இதுவரை காட்டாத பாசத்தை காட்டி குழந்தை போல் கலங்கி நிற்கிறான், உன்னை சாக விட மாட்டேன் மா என்று துடிதுடிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
ஒரே வாரத்தில் தமிழகத்தில் மட்டும் 'கல்கி 2898 AD' திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?