கையில் புத்தகம்.. கண்ணில் தேடல்.. நூலகத்தை மேலும் அழகாக்கிய நடிகை காவ்யா - லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
Actress Kaavya : சீரியல் நடிகையாக தனது பயணத்தை தொடங்கி, இன்று சில்வர் ஸ்கிரீன் நாயகியாக மாறியுள்ள நடிகை தான் காவியா அறிவுமணி.
Kaavya
கடந்த 1996ம் ஆண்டு டிசம்பர் மாதம் நான்காம் தேதி திருப்பத்தூரில் பிறந்த நடிகை தான் காவியா அறிவுமணி. சின்னத்திரை நாடகங்கள் மூலம் இவர் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார்.
Actress Kaavya
கடந்த 2019ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை ஒளிபரப்பான "பாரதி கண்ணம்மா" என்ற நாடகத்தில் காவியா என்கின்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அதன் பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் VJ சித்ரா ஏற்று நடித்த கதாபாத்திரத்தை அவருக்கு பிறகு காவ்யா ஏற்று நடித்தார்.
Kaavya Arivumani
சின்னத்திரை அளித்த புகழின் காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான சக்திவேலின் மிரல் என்கின்ற திரைப்படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது அதுவே அவருடைய முதல் திரைப்படமாகும்.
Kollywood Actress Kaavya
அதன் பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டு மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் வெளியான ரிப்பபரி என்கின்ற திரைப்படத்தில் காவியா அறிவுமணி ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். தொடர்ச்சியாக அவர் நல்ல பல திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
Unseen புகைப்படங்களை வெளியிட்டு கணவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய நஸ்ரியா! வைரலாகும் போட்டோஸ்!