- Home
- Gallery
- Vikravandi By Election: திமுக தலைமையால் ஓரங்கட்டப்படும் அமைச்சர்.. சொந்த மாவட்டத்திலேயே இப்படியொரு நிலைமையா?
Vikravandi By Election: திமுக தலைமையால் ஓரங்கட்டப்படும் அமைச்சர்.. சொந்த மாவட்டத்திலேயே இப்படியொரு நிலைமையா?
அமைச்சர் செஞ்சி மஸ்தானின் சொந்த மாவட்டத்தில் விக்கிரவாண்டி தொகுதி இடைதேர்தலுக்கான பணிக்குழுவில் கூட அவரது பெயர் இடம் பெறாதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vikravandi By Election
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது.
Anniyur Siva
இதனையடுத்து ஆளுங்கட்சியான திமுக முதல் ஆளாக விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பணிகளை கவனிக்க 11 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை திமுக தலைமைக் கழகம் அறிவித்தது.
DMK Election Working Committee
அதில், அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ். சிவசங்கர், சி.வி. கணேசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உள்ளனர். மேலும், கொள்கை பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ. டாக்டர் லட்சுமணன் ஆகியோரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: Minister Masthan: செஞ்சி மஸ்தானின் மாவட்ட செயலாளர் பதவி பறிப்புக்கு இதுதான் காரணமா? தப்புமா அமைச்சர் போஸ்ட்?
Minister Gingee Masthan
ஆனால், அமைச்சர் செஞ்சி மஸ்தானின் சொந்த மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதி இடைதேர்தலுக்கான பணிக்குழுவில் கூட அவரது பெயர் இடம்பெறவில்லை. அவரை திட்டமிட்டே திமுக தலைமை ஓரம்கட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செஞ்சி மஸ்தானின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.