MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • எம்ஜி கோமெட் எலெக்ட்ரிக் காரை வெளியிட்டது எம்ஜி மோட்டார் நிறுவனம்... வியக்க வைக்கும் தொழிற்நுட்ப வசதிகள்!!

எம்ஜி கோமெட் எலெக்ட்ரிக் காரை வெளியிட்டது எம்ஜி மோட்டார் நிறுவனம்... வியக்க வைக்கும் தொழிற்நுட்ப வசதிகள்!!

எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது எம்ஜி கோமெட் என்ற சிறிய ரக எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில் இந்த காரை இந்தியாவில் களமிறக்கியுள்ளது எம்ஜி மோட்டார் நிறுவனம்.

2 Min read
Narendran S
Published : Apr 20 2023, 05:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

இந்த கார் கூர்கானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் காம்பேக்ட் கார் என்பதால் பாக்ஸி டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. 2 டோர் கொண்ட இந்த காரில் 4 பேர் அமர்ந்து செல்லும்படி சீட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த காரில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் மற்றும் இலுமினேடட் எம்ஜி லோகோ முன்பக்கமும் பின்பக்கமும் எல்இடிலைட் பார் வழங்கப்பட்டுள்ளது.

28

எம்ஜி கோமெட் இவி காரில் 17.3 கிலோவாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது 42 பிஎச்பி பவரையும் 110 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது ரியர் வீல் டிரைவ் காராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் முழு சார்ஜில் 230 கி.மீ வரை செல்லும் திறன் கொண்டது என கூறப்படுகிறது. 

38

இந்த காாின் சார்ஜரை பொருத்தவரை 3.3 கிலோவாட் ஹவர் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 0-80 சதவீத பேட்டரியை வெறும் 5 மணி நேரத்தில் சார்ஜ் ஆகிவிடுகிறது. ஆனால் முழுமையாக சார்ஜ் ஏற சுமார் 7 மணி நேரம் வரை எடுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது. 

48

நகரங்களில் நிலவும் டிராஃபிக்கிற்கு ஏற்றவாறு இந்த கார் சிறிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 2,974 மிமீ நிளமும், 1,505 மிமீ அகலமும், 1,640 மிமீ உயரமும் கொண்டது. 2,010 மிமீ வீல் பேஸ் கொண்டது என தெரிகிறது. இந்த காரில் 12 இன்ச் ஸ்டீல் வீல் பொருத்தப்பட்டுள்ளது. கதவு ஹேண்டில்களில் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

58

சஸ்பென்சனை பொருத்தவரை முன்பக்கம் 2 வீலில் மெக் பெர்சன் ஸ்டர்ட் சஸ்பென்சன் மற்றும் பின்பக்கம் மல்டி லிங்க் காயில் சஸ்பென்சன்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பிரேக்குகளை பொருத்தவரை முன்பக்கம் டிஸ்க் மற்றும் பின்பக்கம் டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

68

இந்த கார் சிறியதாக இருந்தாலும் இந்த காரின் உட்புறத்தில் பல தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 10.5 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளது. இதனை இந்த கார் குறித்து வெளியான புகைபடம் தெளிவுப்படுத்தியுள்ளது. இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய அம்சங்கள் உள்ளது. மேலும் ஸ்டியரிங் மவுண்ட்டட் கண்ட்ரோல்களும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

78

இதுமட்டுமின்றி இதில் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட சில முக்கிய அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் கீலெஸ் என்ட்ரி, எலெக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்புள் ஓஆர்விஎம், டில்ட் அட்ஜெஸ்டபுள் ஸ்டியரிங், பின்பக்கம் 50:50 ஸ்பிலிட் சீட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக டூயல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், சீட்பெல்ட் ரிமைன்டர் சிஸ்டம், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ஸ்பீடு சென்சிங் டோர் லாக், ஆட்டோ டோர் அன்லாக் பங்சன் ஆகிய வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

88

இந்த காரில் முதன் முறையாக ஸ்மார்ட் கீ அம்சம் வழங்கப்பட்டுள்ளது. 3 பட்டன்களுடன் இருக்கும் இந்த கீயில், லாக், அன்லாக், மற்றும் பூட் டோர் திறக்கும் பட்டன்கள் உள்ளன. இந்த காரின் விலையைப் பொருத்தவரை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. வரும் மே 26 ஆம் தேதி முழு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த காரின் விலை 10 முதல் 15 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

NS
Narendran S
எம்ஜி காமெட் EV

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved