- Home
- Gallery
- மெகா ஹிட் ரொமான்டிக் படம்.. 18 ஆண்டுகள் கழித்து உருவாகும் Part 2 - கவினிடம் பேச்சுவார்த்தை - என்ன படம் அது?
மெகா ஹிட் ரொமான்டிக் படம்.. 18 ஆண்டுகள் கழித்து உருவாகும் Part 2 - கவினிடம் பேச்சுவார்த்தை - என்ன படம் அது?
Actor Kavin : தொடர்ச்சியாக மூன்று வெற்றி படங்களை கொடுத்துள்ள நடிகர் கவின் நடிப்பில் அடுத்தபடியாக 3 படங்கள் உருவாகி வருகின்றது. பிரபல நடிகை நயன்தாராவுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் கவின்.

Actor Kavin
தமிழ் திரையுலகில் "நட்புன்னா என்னன்னு தெரியுமா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தான் கவின். ஏற்கனவே அவர் நடிப்பில் வெளியான "டாடா", "லிப்ட்" மற்றும் "ஸ்டார்" போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி திரைப்படங்களாக மாறி உள்ளது.
Nayanthara
இந்த தொடர் வெற்றியை அடுத்து நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் "Bloody Beggar" என்கின்ற திரைப்படத்திலும், கிஸ் என்கின்ற திரைப்படத்திலும், பிரபல நடிகை நயன்தாராவுடன் ஒரு திரைப்படத்திலும் இப்பொழுது நடித்து வருகிறார் பல நடிகர் கவின்.
Chillunu oru kadhal
இந்த சூழலில் சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான "சில்லுனு ஒரு காதல்" திரைப்படத்தில் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாகவும், அதில் நடிக்க கவினிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Obeli
18 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் கிருஷ்ணா இயக்கியிருந்த நிலையில், தற்பொழுது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் கவினை வைத்து அவர் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கிருஷ்ணா இறுதியாக சிம்புவின் "பத்து தல" திரைப்படத்தை இயக்கியிருந்தார்.