Meenakshi Ponnunga: சக்திக்கு ரங்கநாயகி கொடுத்த தண்டனை! உண்மையை மறைத்த வெற்றி 'மீனாட்சி பொண்ணுங்க' அப்டேட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், சீரியல் மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் இன்றைய அப்டேட் குறித்து பார்க்கலாம்.
இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் புஷ்பா மீனாட்சியை கொலை செய்ய திட்டம் போட்டு இருக்க மாட்டாள். அவள் தன் மகன் மீது சத்தியம் செய்து விட்டாள் என்று நீதிமணி சொல்லியும் சக்தி கேட்காமல் நான் போனில் புஷ்பா பேசியதை கேட்டேன் என்று உறுதியாக சொல்லி புஷ்பாவை போலீஸ் லாக்கப்பில் வைக்கிறாள்.
இதனால் கோபமடைந்த நீதிமணி சக்தியையும் வெற்றியையும் திட்டி விட்டு போகிறார். கோவம் அடைந்த புஷ்பா நான் வெளியில் வந்தால் உன் குடும்பத்தை பழிவாங்குவேன் என்று சொல்ல, சக்தி முடிந்ததை பார் என்று சொல்லிவிட்டு போகிறாள். சங்கிலி புஷ்பாவிடம் வந்து சண்முகத்தின் மேல் ஏன் பொய் சத்தியம் செய்தீர்கள் என்று கேட்க வேறு வழி இல்லாமல் செய்து விட்டேன் பரிகாரம் செய்து கொள்ளலாம் என்று புஷ்பா கூறுகிறாள்.வெற்றி சக்தியை சமாதானம் செய்து மீனாட்சியை பார்க்க வீட்டிற்கு வந்து நலம் விசாரிக்கிறான்.
மீனாட்சி ரங்கநாயகியின் வெள்ளி விழாவை பற்றி கேட்க, வெற்றி சொல்லாமல் மறைத்து விடுகிறான். பிறகு சக்தியை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். ரங்கநாயகி சக்தியை பார்த்ததும் என் வெள்ளி விழாவுக்கு கூட வர முடியாமல் எக்ஸாமிற்கு நீ சென்று விட்டாயா என்று கேட்க ,சக்தி மீனாட்சி ஆபத்தான நிலைமையில் இருந்ததை கூற, அதற்கு ரங்கநாயகியோ நீ சொல்வதெல்லாம் நீ எக்ஸாம் போன பிறகு நடந்தது , என சொல்ல,சக்தி எவ்வளவோ விளக்கம் சொல்லியும் ரங்கநாயகி நீ வேண்டுமென்றே என் விழாவை புறக்கணித்து விட்டாய் என்று சக்தியை திட்டி இனி வீட்டுக்குள்ளே வரக்கூடாது என்று சொல்லி விடுகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.