MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • முடிவுக்கு வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரைம் டைம் சீரியல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

முடிவுக்கு வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரைம் டைம் சீரியல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், முக்கிய தொடரான 'மீனாட்சி பொண்ணுங்க' சீரியல் இந்த வாரத்துடன் முடிவுக்கு வர உள்ள தகவல் உறுதியாகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Jul 29 2024, 06:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், கடந்த 2022 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தொடர் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் 'பாக்கியலட்சுமி' தொடரில் பாக்யாவின் மகன் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆர்யன் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக சௌந்தர்யா ரெட்டி நடித்து வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீரஞ்சனி நடிக்கிறார். கடந்த இரண்டு வருடமாக ஜீ தமிழில் பெருவாரியான ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'ராதம்மா குத்துருவி'  என்கிற சீரியலின் ரீமேக்காக தமிழில் எடுக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

'குக் வித் கோமாளி' சீசன் 5 இந்த வார செஃப் ஆப் தி வீக் மற்றும் எலிமினேட் ஆன பிரபலம் யார் தெரியுமா?

36

மகன் வேண்டும் என்கிற ஆசையில் மீனாட்சியின் கணவர் அடுத்தடுத்து யமுனா, சக்தி, துர்கா என மூன்று பெண் பிள்ளைகளை பெற்றுக் கொண்டு, பின்னர் மனைவியை விட்டு விட்டு புஷ்பா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார். யாருடைய ஆதரவும் இல்லாமல் நிர்கதியாக நிற்கும் மீனாட்சி, உணவகம் ஒன்றை நடத்தி அதில் வரும் வருமானத்தைக் கொண்டு தன்னுடைய மூன்று மகள்களையும் வளர்த்து ஆளாக்குகிறார். சக்தி தன் தந்தையை பழிவாங்க ஐஏஎஸ் அதிகாரி ஆவதாக சபதம் எடுக்கும் நிலையில் அந்த ஊரின் பெரிய மனுசியாக இருக்கும் ரங்கநாயகி மகன் வெற்றியை திருமணம் செய்து கொள்ள நேர்கிறது. வெற்றி சக்தியை உருகி உருகி காதலித்தாலும் ஆரம்பத்தில் இருந்தே வெற்றியை பிடிக்காத சக்தி பின்னர் அவரை ஏற்றுக்கொள்கிறார்.

46

தற்போது சக்தி ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கும் நிலையில், தன்னுடைய மாமியார் ரங்கநாயகியின் கோபத்தை தனித்து குடும்பத்துடன் இணைகிறாரா? தந்தையை பழிவாங்குகிறாரா என்கிற விறுவிறுப்பான கதைகளத்துடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்தது. வெற்றி - சக்தியின் காதல் காம்பினேஷன் பல ரசிகர்களை இவர்களுக்கு உருவாக்கியது.

ஹீரோவா பல கெட்டப்பில் நடிச்சாலும்... கமல் வில்லன் யாஷ்கினா மாற என்ன பாடு படுறாரு பாருங்க! வைரலாகும் புகைப்படம்

56

ஏற்கனவே ஆர்யன், ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் பேசிய போது... மீனாட்சி பொண்ணுங்க தொடர் முடிவடைய உள்ளதாக கூறினார். இதை தொடர்ந்து இந்த வாரத்துடன் முடிவுக்கு வர உள்ளதை கடைசி நாள் ஷூட்டிங்கின் போது எடுத்துக்கொண்ட கிலிம்ஸி காட்சியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டு தெரிவித்திருந்தார்.

66

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரைம் டைம் தொடரான, 'மீனாட்சி பொண்ணுங்க' சீரியல் முடிவுக்கு வர உள்ளது... இந்த சீரியலை விரும்பி பார்க்கும் பல ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கமலை உதாசின படுத்திய ஸ்ரீவித்யா.! இருவருக்கும் நடந்த பிரச்சனை இதுதான்? திடீர் முடிவால் திசைமாறிய வாழ்க்கை!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சீரியல்
தொலைக்காட்சி
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved