Bigg Boss Promo: பூர்ணிமாவுடன் ஏற்பட்ட வாக்குவாதம்! பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேறிய போட்டியாளர்!
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர் திடீர் என, சாப்பாட்டுக்காக ஸ்மால் பாஸ் வீட்டுக்கு சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bigg boss season 7 task
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒருபுறம், மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்க... டாஸ்குகளை பிக்பாஸ் நாளுக்கு நாள் கடுமையாக்கி கொண்டே செல்கிறார். இந்நிலையில் சற்று முன் வெளியான புரோமோவில்... யாரும் எதிர்பாராத விதமாக பூர்ணிமா மற்றும் மாயா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, மாயா பிக்பாஸ் வீட்டில் இருந்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார்.
Bigg boss house lost the task
இன்றைய முதல் புரோமோவில், பிக்பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் போட்டியாளர்களுக்குள் நடந்த போட்டியில் ஸ்மால் பாஸ் வீட்டை சேர்ந்தவர்கள் வெற்றிபெறுகிறார்கள். எனவே பிக்பாஸ் வீட்டை சேர்ந்தவர்களுக்கு இனி சாப்பாடு கிடையாது என பிக்பாஸ் அறிவித்தார்.
poornima and maya fight
இதை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இணை பிரியாத தோழிகளாக வலம் வந்து கொண்டிருந்த, கேப்டன் பூர்ணிமா மற்றும் மாயா இடையே கடும் வாக்குவாதம் நடக்கிறது. கிடைத்த கேப்பில் எல்லாம் கன்டென்ட் கொடுக்க நினைக்கும் மாயா, கிச்சனில் வந்து எனக்கு பசிக்குது சாப்பாடு வேண்டும் என கூறுகிறார். பின்னர் ஸ்மால் பாஸ் வீட்டினரை பார்த்து, நான் அங்கு வந்தால் உங்களுக்கு ஓகே என கேட்க, நிக்சன் வாங்க பார்த்துக்கலாம் என கூறுகிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
maya go to small house
இதை எதிர்த்து பூர்ணிமா கேள்வி எழுப்ப, அங்கிருந்து வரவங்கள உங்களால தடுக்க முடியாத அப்போ எங்க கிட்ட பேசாதீங்க என கூறுகிறார். ஒரு கட்டத்தில் பூர்ணிமா - மாயா இடையே வாக்குவாதம் முத்த, நான் என்னை பார்த்துக்கொள்ள தான் இங்க வந்துருக்கேன், உங்கள பாத்துக்குறது என் வேலை இல்லை என மூஞ்சில் அடித்தது போல் கூறுகிறார். பின்னர் தனக்கு சோறு தான் முக்கியம் என, பிக்பாஸ் வீட்டில் இருந்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு மாயா தாவி உள்ளதால் வேறு ஏதாவது பிரச்சனை வெடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.