விராட்டுக்கு தங்கத்தால் ஆன சிலை வைத்த மெத்தை தயாரிக்கும் நிறுவனம்!
அமெரிக்காவில் டைம்ஸ் ஸ்கொயரில் மெத்தை தயாரிக்கும் நிறுவனமான டூரோஃப்ளெக்ஸ் விளம்பரத்திற்காக விராட் கோலிக்கு தங்கத்தால் ஆன சிலை ஒன்றை வைத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு நாளில் டி20 உலகக் கோப்பை தொடரானது முடியும் தருவாயில் உள்ளது. இந்த தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்றுள்ளது.
தற்போது 2ஆவது அரையிறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டி கயானாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரையில் விளையாடிய 7 போட்டிகளில் விராட் கோலி மொத்தமாக 75 (1, 4, 0, 24, 37, 0, 9) ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான ஃபார்மை வெளிப்படுத்திள்ளார்.
ரன் மெஷின் என்று அழைக்கப்படும் கோலி இப்படி சொற்ப ரன்களில் வெளியேறி வருவது ரசிகர்களிடையே விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது. இந்த நிலையில் தான் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்திலுள்ள டைம்ஸ் ஸ்கொயரில் விராட் கோலி தங்கத்தால் ஆன சிலை வைக்கப்பட்டுள்ளது.
கட்டில், மெத்தை தயாரிக்கும் நிறுவனமான டூரோஃப்ளெக்ஸ் என்ற நிறுவனம் விராட் கோலிக்கு என்று தங்கத்தால் ஆன சிலை ஒன்றை நிறுவியுள்ளது. அந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக இருக்க்ம் விராட் கோலிக்கு இப்படியொரு சிலை ஒன்றை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. Virat Kohli Gold Statue at Times Square
கம்யூட்டர் கிராபிக்ஸ் மூலமாக உருவாக்கப்பட்ட அந்த வீடியோவை டூரோஃப்ளெக்ஸ் நிறுவனம் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் விராட் கோலியின் உயிரை விட பெரிய சிலை நியூயார்க் மாகாணத்தின் டைம்ஸ் ஸ்கொயர் அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.Virat Kohli Gold Statue at Times Square
Duroflex எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், டைம்ஸ் ஸ்கொயரில் விராட் கோலியின் உயிரைக் காட்டிலும் பெரிய சிலை நிறுவப்பட்டுள்ள்ளது. நாங்கள் உலகம் முழுவதும் சென்று சரித்திரம் படைக்கிறோம். விராட் கோலிக்கு நல்ல தூக்கம், சிறந்த ஆரோக்கியத்தை இந்த மெத்தை மூலமாக நாங்கள் வழங்குகிறோம். முன்னணி மெத்தை நிறுவனமான டூரோஃப்ளெக்ஸ் உடனான கோலியின் ஒப்பந்தம் மூலமாக இந்த அசாதாரண சாதனை படைக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Virat Kohli Gold Statue at Times Square