என்னால முடியாதுப்பா.. தங்க சிலை திரிஷாவுடன் லிப் லாக் - வாய்ப்பில்லை ஜானு என்று சொல்லி எஸ்கேப் ஆனா நடிகர்!
சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்பாக டாப் ஸ்டார் பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் ஏற்று நடித்து தமிழ் துறை உலகில் அறிமுகமான நடிகை தான் திரிஷா.
Actress Trisha Krishnan
நடிகை திரிஷா தனக்கு கிடைக்கும் வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக்கொள்ளும் சிறந்த நடிகைகளில் ஒருவராவார். இவருடைய நடிப்பில் ஆரம்ப காலகட்டத்தில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. மனசெல்லாம், மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா போன்ற படங்கள் அதற்கு சாட்சி.
Trisha Krishnan
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், தல அஜித், விக்ரம் மற்றும் சூர்யா என்று, இவர் ஜோடி போட்டு நடிக்காத முன்னணி நடிகர்களே தமிழ் திரை உலகில் இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு உச்ச நடிகையாக சற்றும் இடைவெளி விடாமல் 24 ஆண்டுகளாக பயணித்து வருகின்றார் நடிகை திரிஷா.
Jessy
இந்நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு மீண்டும் த்ரிஷாவை அவரது 90ஸ் கிட்ஸ் ரசிகர்களால் பெரிதும் ரசிக்க வைத்த திரைப்படம் தான் 96. ஜெஸ்ஸி எந்த அளவிற்கு பிரபலமோ அதே அளவிற்குத் தான் ஜானுவும். ஜெஸியும், ஜானுவும் ஒரு எமோஷன் என்றால் அது மிகையல்ல.
Janu and Ram
96 திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் திரிஷாவும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் ஏர்போர்ட்டில் பிரியும் முன்பாக ஒரு லிப் லாக் சீனை எழுதி இருந்தாராம் இந்த படத்தின் இயக்குனர் பிரேம்குமார். ஆனால் லிப் லாக் என்றால் ஆள விடுங்கடா சாமி நான் வரவில்லை என்று கூறி அங்கிருந்து ஓட்டம் பிடிக்க துவங்கியுள்ளார் மக்கள் செல்வன். எவ்வளவு முயன்றும் லிப்லாக்குக்கு அவர் சம்மதிக்காத நிலையில் அந்த காட்சி படமாக்கப்படவில்லை என்ற ருசிகர தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.