வீடே மணக்கும் மசாலா டீ..இப்படி ஒருமுறை போட்டு பாருங்க.. அசந்துடுவிங்க..!
Masala Tea Recipe : மசாலா டீ யை வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி என்று இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
டீ-யின் சுவைக்கு அடிமையாகாதவர்கள் யாருமே இருக்க முடியாது. சிலர் ஒரு நாளைக்கு சாப்பிடாமல் கூட இருப்பார்களே தவிர, டீ குடிக்காமல் இருக்கவே மாட்டார்கள். டீயில் பல வகைகள் உண்டு. அவை இஞ்சி டீ, புதினா டீ, கிரீன் டீ என இப்படி வரிசையாக சொல்லலாம். ஆனால், பலரையும் கவர்ந்தது மசாலா டீ தான்.
சில குறிப்பிட்ட மசாலா பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த டீ சுவையாக இருப்பது மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கும் ரொம்பவே நல்லது. காரணம், இதில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் தான். இப்போது இந்த மசாலா டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : இஞ்சி - 1 துண்டு, பட்டை - 1 துண்டு, ஏலக்காய் - 6, இலவங்கம் 2, பால் - 2 கப், தண்ணீர் - சிறிதளவு, டீ தூள், சர்க்கரை - தேவையான அளவு,
செய்முறை: அடுபில் ஒரு பத்திரத்தை வைத்து பால் காய்ச்சவும். மற்றொரு அடுப்பில் தண்ணீரை சூடாக்கவும். பிறகு ஏலக்காய், பட்டை, இஞ்சி, இலவங்கம் ஆகியவற்றை சேர்த்து மையாக இருக்கவும்.
இதையும் படிங்க: Irani Chai : ஹைதராபாத் ஸ்பெஷல் 'இரானி டீ'... இனி நீங்களும் வீட்டில் செய்யலாம்.. ரெசிபி இதோ!
தண்ணீர் சூடானதும் அதில் 2 ஸ்பூன் டீ தூள் சேர்க்கவும். பிறகு இடித்து வைத்ததை அதில் சேர்த்து சுமார் ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். அடுத்து அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும். டீ டிகாஷன் தயார்.
இதையும் படிங்க: Masala tea: பசியை போக்கி டக்னு எடை குறைய வைக்கும் மகத்தான மசாலா டீ!
பால் நன்றாக பொங்கி வந்ததும் அதில் தயாரித்து வைத்த டீ டிகாஷனை சேர்க்கவும். பிறகு அதை அடுப்பில் மூன்று நிமிடம் வைத்து, பிறகு வடிகட்டவும். அவ்வளவுதான் டேஸ்ட்டான மசாலா டீ ரெடி!