மிதுனம் செல்லும் செவ்வாய்.. இந்த 4 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் ஜொலிக்க போகுது!
Mars Transit In Gemini 2024 : செவ்வாய் மிதுன ராசியில் சஞ்சரிக்கப் போவதால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். அது எந்தெந்த ராசிகள் என்று இங்கு பார்க்கலாம்.
ஜோதிட சாஸ்திரங்கள் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும். கிரகங்களின் இந்த மாற்றத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளையும் தாக்கும்.
அந்த வகையில், தைரியம் மற்றும் ஆற்றலின் காரணியாக கருதப்படும் செவ்வாய், தனது எதிரியான புதனின் ராசியான மிதுன ராசிக்குள் ஆகஸ்ட் 26, 2024 ஆம் தேதி பிற்பகல் 3:40 மணிக்குள் நுழைகிறது. செவ்வாயின் இந்த ராசி மாற்றம் எந்தெந்த ராசிகளுக்கு நல்ல பலன் தரும் என்பதை இங்கு பார்க்கலாம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களே செவ்வாயின் இந்த சஞ்சாரத்தால் உங்களுக்கு மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் உங்களது உடல்நிலை நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். முக்கியமாக, உங்களது கடின உழைப்பின் காரணமாக நீங்கள் வெற்றியை காண்பீர்கள். மொத்தத்தில் செவ்வாயின் இந்த பெயர்ச்சி உங்களுக்கு இனிமையாக இருக்கும்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களே செவ்வாயின் இந்த சஞ்சாரத்தால் நீங்கள் நல்ல செய்திகளை பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் கூடும். பொருளாதார நிலையில் முன்னேற்றத்தை காண்பீர்கள். உங்களது நீதிமன்ற பணிகள் வெற்றி அடையும். முக்கியமாக செய்யும் தொழிலில் புதிய உயரங்களை அடைவீர்கள்.
இதையும் படிங்க: இந்த 5 ராசிக்காரங்க முட்டாள்தனத்தால் அடிக்கடி ஏமாறுவாங்க.. இதுல உங்க ராசி இருக்கா..?
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களே செவ்வாய் நெஞ்சு சஞ்சாரத்தால் நீங்கள் வருமானத்தில் உயர்வை காண்பீர்கள். இந்த காலகட்டத்தில், உங்களது கனவுகள் அனைத்தும் நனவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்கள் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும்.
இதையும் படிங்க: New year Rasi Palan 2025: ராகு சனி கூட்டணி; குருவை பார்க்கும் சனி - எந்த ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை?
கும்பம்: கும்ப ராசிக்காரர்களே செவ்வாயின் இந்த சஞ்சாரத்தால் நீங்கள் சாதகமான பலனை காண்பீர்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் வசதிகள் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். செய்யும் தொழிலில் லாபத்தை காண்பீர்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D