என் தங்கச்சி ஸ்ரீதேவி சரியான ஃபிராடு! தங்கையை பற்றி புட்டு புட்டு வைத்த வனிதா விஜயகுமார்..!
மஞ்சுளாவின் மகளான வனிதா விஜயகுமார், தன் தங்கச்சிகள் ஸ்ரீதேவி மற்றும் பிரீத்தா பற்றி அளித்த பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகிறது.
vanitha and sridevi vijayakumar
மஞ்சுளா - விஜயகுமார் நச்சத்திர ஜோடியின் மூத்த மகளான வனிதா விஜயகுமார், விஜய்யின் 'சந்திரலேகா' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். வெறும் 5 படங்களில் மட்டுமே நடித்த இவருக்கு பெரியளவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால், பின்னர் நிரந்தரமாக திரையுலகிற்கு டாட்டா காட்டிவிட்டு கல்யாணம் பண்ணி செட்டில் ஆனார்.
vanitha vijayakumar
திருமணத்திற்கு பின், குழந்தை குடும்பம் என பொறுப்பான மனைவியாகவும், அன்பான தாயாகவும் இருந்து வந்த வனிதாவின் வாழ்க்கையில் பூகம்பமாய் ஒரு சில பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பித்தன. இதனால் தன்னுடைய முதல் கணவர் ஆகாஷிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்த வனிதா, அதே ஆண்டு ஆனந்த் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
vijayakumar daughter vanitha
பின்னர் இரண்டாவது கணவரிடம் இருந்தும், விவாகரத்து பெற்று பிரிந்த வனிதா, தன்னுடைய 3 குழந்தைகளையும் தானே வளர்க்க வேண்டும் என விரும்பினார். ஆனால், வனிதாவின் மகன் ஸ்ரீஹரி அப்பாவுடன் இருக்க விரும்பியதால் நீதிமன்றமும் அதற்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து நிரந்தரமாக வனிதாவை விட்டு பிரிந்து தந்தையிடம் வளர்ந்து வருகிறார் ஸ்ரீஹரி.
vanitha
தனது தந்தை விஜயகுமார் உடன் ஏற்பட்ட பிரச்சனையால் வீட்டைவிட்டு வெளியேறிய வனிதா, தற்போது தனது மகள்கள் ஜோவிகா மற்றும் ஜெயனித்தா ஆகியோருடன் தனியே வீடெடுத்து வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்ட வனிதாவுக்கு அந்த வாழ்க்கையும் ஓரிரு மாதங்களில் முடிவுக்கு வந்தது.
இதையும் படியுங்கள்... எதிர்நீச்சல் சீரியல் நடிகை திடீரென மருத்துவமனையில் அனுமதி... ‘யம்மா ஏய்’ என்னம்மா ஆச்சு என பதறிப்போன ரசிகர்கள்
sridevi vijayakumar
தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வரும் வனிதா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தன்னுடைய தங்கைகள் பிரீத்தா மற்றும் ஸ்ரீதேவி குறித்தும், காதல் திருமணத்திற்கு தான் எதிரி அல்ல எனவும் பேசி உள்ளது வைரலாகி வருகிறது.
அதன்படி வனிதா தன்னுடைய இரண்டு தங்கைகள் குறித்து பேசியதாவது : “சின்ன வயசுல இருந்தே என்னோட அம்மா மஞ்சுளா என்னையும் என் தங்கச்சி பிரீத்தாவையும் அடிச்சு தான் வளர்த்தாங்க. ஆனால் கடைசி தங்கையான ஸ்ரீதேவியை மட்டும் என் அம்மா எப்பவுமே அடிக்க பயப்படுவார். அதற்கு ஒரு காரணம் இருக்கு, குழந்தையாக இருக்கும்போதே ஸ்ரீதேவி மிகவும் கோபப்படுவாள். கோபம் வந்தால், ரூமுக்குள் சென்று கதவை பூட்டி தாப்பா போட்டுக் கொள்வார். கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் போட்டு உடைப்பா. சின்ன வயசுல இருந்தே ஸ்ரீதேவி சரியான பிராடு, நல்ல ட்ராமா பண்ணி எல்லாரையும் ஏமாத்திடுவா. அதனாலேயே ஸ்ரீதேவியை மட்டும் யாருமே அடிக்க மாட்டாங்க என அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
vanitha daughter jovika
தொடர்ந்து காதல் குறித்து பேசிய வனிதா, பலரும் நான் காதலை பிரித்து விடுவேன் என நினைக்கிறாங்க. ஆனா, உண்மையில் நான் காதலுக்கு எதிரி அல்ல. இதுவரை 12 பேருக்கு காதல் கல்யாணம் செஞ்சு வச்சிருக்கேன் என வனிதா தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய மகன் ஸ்ரீஹரி மற்றும் மகள்கள் ஜோவிதா, ஜெயனித்தா ஆகியோர் கண்டிப்பாக சினிமாவுக்கு வருவார்கள் எனவும் அந்த பேட்டியில் வனிதா கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்... காதலியை கரம்பிடிக்கப்போகும் 'வானத்தை போல' சீரியல் ஹீரோ ராஜ பாண்டி! நடந்து முடிந்தது நிச்சயதார்த்தம்! போட்டோஸ்