கௌதமி, மனிஷா கொய்ராலா முதல் ஹிரா கான் வரை..! கொடூர புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகைகள்!
பாலிவுட் நடிகை, ஹினா கான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வருவதாக நேற்று அறிவித்து அதிர்ச்சி கொடுத்த நிலையில்... இந்த கொடூர வியாதியால் பாதிக்கப்பட்ட நடிகைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பாலிவுட் நடிகை ஹினா கானுக்கு மார்பக புற்று நோய் 3-ஆவது நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த தகவல் வெளியாகி, ஹினா கான் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இதுகுறித்து விளக்கம் கொடுக்கும் விதமாக ஹினா கான் நேற்று தன்னுடைய சமூக வலைத்தளத்தில், தனக்கு புற்று நோய் இருப்பது உண்மை தான் என்றும், ஆனால் நான் ஆபத்தான நிலையில் இல்லை ஆரோக்கியமாக சிகிச்சை எடுத்து வருவதாக கூறி தெரிவித்தார். ரசிகர்களும் ஹினா கான் கூடிய விரைவில் குணமடைய வேண்டும் என தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஹினா கானுக்கு முன்பு, இந்த கொடூர நோய்யுடன் போராடிய சில பிரபலங்களும் உள்ளனர் என்பது உங்களுக்கு தெரியுமா? அப்படி புற்றுநோயுடன் போராடி வெற்றிகண்ட நடிகைகளில் ஒருவர் மனிஷா கொய்ராலா. மனிஷா 2012 இல் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். புற்றுநோயில் இருந்து குணமடைய, அமெரிக்கா சென்ற அவர் அங்கு அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளை மேற்கொண்டார். ஒரு வருட போராட்டத்திற்கு பின்னர் புற்றுநோயில் இருந்து விடுபட்டார். தற்போது வரை புற்று நோய் குறித்து விழிப்புணர்வு பலரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறார் மனிஷா கொய்ராலா.
Actress Gautami
அதே போல் பிரபல நடிகை கௌதமியும் இந்த கொடூர நோயின் பிடியில் சிக்கி மீண்டவர் தான். இவருக்கு 35 வயது இருக்கும் போது கௌதமக்கி மார்பக புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. சென்னையிலும், அமெரிக்காவிலும் இவர் தொடர்ந்து சிகிச்சை பெற்ற நிலையில் பின்னர் அதில் இருந்து மீண்டார். தற்போது இவர் பல பெண்களுக்கு மார்பக புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
தமிழில் காதலர் தினம் படத்தில் நடித்திருந்த பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு 2018 இல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவர் நியூயார்க்கில் சிகிச்சை பெற்றார். அங்கு அவர் கீமோதெரபி மற்றும் பிற சிகிச்சைகளை மேற்கொண்ட போது ஏற்பட்ட பின் விளைவுகள் குறித்தும் அந்த சமயத்தில் உணர்வு பூர்வமாக பதிவு செய்தார். பல மாத சிகிச்சைக்கு பின்னர் முழுமையாக சோனாலி பிந்த்ரே புற்றுநோயில் இருந்து மீண்டார்.
நடிகை மஹிமா சவுத்ரிக்கும், ஜூன் 2022 இல் தனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். கீமோதெரபி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே பூரண குணமடைந்துள்ளார். புற்றுநோய் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது, கீமோ சிகிச்சையின் போது பட்ட வலிகளையும், வேதனைகளையும் மஹிமா பகிரங்கமாக பகிர்ந்து கொண்டார்.
அதே போல் பாலிவுட்டின் மூத்த நடிகையான கிர்ரோன் கெர், 2021 ஆம் ஆண்டில் மல்டிபிள் மைலோமா, என்கிற அரிய வகை இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். ரத்தத்தை சுத்தீகரிக்கும் சிகிச்சை, கீமோதெரபி உள்ளிட்ட பல சிகிச்சைகளை மேற்கொண்டு, இந்த புற்றுநோயில் இருந்து மீண்டார். தற்போது ஆரோக்கியமான வாழ்வு குறித்தும் புற்று நோய்க்கு எதிராக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.